பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 எட்டுத்திசை யுமதிர்ந்திடவே அங்கே எழும்பும் பீரங்கிச் சத்தங்களும் கோட்டையைச் சுற்றி அகில் கிடங்கும் அதில் கோபுரவாசலும் மேடைகளும் 1880 நாட்டை ஒடுக்குந் துரைமார்கள் பங்களா நடப்புஞ் சாரிகள் கண்டனராம். அந்நேரந் தானுபதிப் பிள்ளையு மங்கே என்னென்ன யோசனை சொல்லலுற்ருர், இன்னேரஞ் சென்னல் துரையிடத்தில் நான், தனிமையாகவே போய்வாரேன். சற்சித் துரைகளைக் கண்டு பேட்டி செய்து இச்சணம் வாரேனென உரைத்தார். கெற்சிதமுள்ள பிரதானிப் பிள்ளையும் சற்சி, கெவுணரைக் கண்டனளும் 1890 சென்னலுக்கே சலாஞ் சொல்லினனும் வெகு தீர்க்கமாய்ச் செய்தி மொழிந்தனனும் முன்னலே துரைகளுத்தர வின் படி யென்னும் பாஞ்சைத் துரையிப்போது மார்க்கமாய் வந்து இருப்பதினுல் வெகு தீர்க்கமாய் பேட்டி செய்ய வேணுமென்ருன். சேர்க்கையுள்ள துரை மார்களெல்லாம் இந்த வாக்கு மூலச் செய்தி தான் கேட்டு அப்படியே வெகு மேன்மை செய்வோம் நல்ல தாகட்டும் நாளைக்குப் பேட்டி யென்ருர். 1900 செப்பமுள்ள துரை மாருரைக்க அந்தச் சுப்பிரமணிய பிள்ளையும் தான் திரும்பி கட்டபொம்முதுரை சமூகந்தனில் வந்து இஷ்டமாய்ச் செய்தி மொழிந்திடவே அஷ்டலக:மி விலாசம் பொருந்தவே அதிகந் தொட்டியாகிடவே மறு நாளுதைய காலத்திலே துரை மார்களாலோசினை யேது சொல்வார் திரசுடனொரு பாஷை சொன்னரங்கே சென்னபட்டனஞ் சிங்காரஞ் செய்தார். 3 & 1 {} மங்களமாய் வெகு இங்கிதமாய் துரை மாருட பங்களாவீடு