பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 வர்க்கங்களோடு தொடர்பு கொள்கிருன். இந்தத் தொடர்பு அவனுடைய வர்க்க நலன்களே அடிப்படையாகக் கொண்டிருக்கும். இத்தொடர்புகளனைத்தும், அவன் குறிப்பிட்ட சரித்திரக் கட்டத் தில் பொருளுற்பத்தி முறையில் இவ்வர்க்கங்கள் கொண்டுள்ள பங்கைப் பொறுத்திருக்கும். ஒரே பொருளாதார நலன்களைக் கொண்டவர்க்கங்கள் வெவ்வேறு முறையில் தங்களுடைய வர்க்க நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளுதலும் உண்டு இவ்வாறு சரித் திரத்தைக் காண்பது சரித்திர இயல், பொருள்முதல்வாதம் என்று சொல்லப்படுகிறது. இம்முறையில் கட்டபொம்மனது வரலாற்றுப் பாத்திரத்தை மதிப்பிட முயன்ருல் அவனைப்பற்றிப் பூரணமான ஒரு சித்திரத்தை நாம் பெற முடியும். கட்டபொம்மன் காலத்தில் நாயக்கர் ஆட்சி முடிந்து விட்டது. அவர்கள் காலத்தில் வரி வசூலுக்காகவும், புத்தங்களை நடத்துவதற் காகவும் ஏற்படுத்தப்பட்ட, பாளையப்பட்டுகள் யாருடைய மேலாதிக்கத்தின் கீழும் இல்லாத நிலை ஏற்பட்டது. இச்சமயம் தடி எடுத்தோன் தண்டல்காரன் என்று ஆயிற்று, வலிமைமிக்க ராமநாதபுரம், சிவகங்கை, எட்டையபுரம், சிவகிரி போன்ற பாளையப்பட்டுகள் முடிந்த அளவுக்கு நிலப்பரப்பைப் பெருக்கிக் கொண்டன. இப்போட்டியின் காரணமாகப் பூசல்கள் மிகுந்தன. நாயக்கர் ஆட்சிக்குப் பின் ஆற்காட்டு நவாபின் ஆட்சி ஏற்பட் டிருந்தபோதிலும் அது இங்கு பெயரளவிற்கே தென்பாண்டி நாட்டில் நிலை கொண்டிருந்தது. நவாபின் உறவினர்களிடையே பதவிப்போட்டி உண்டாயிற்று. பாளையக்காரர்களுக்குள்ளும் பதவிப் போட்டிகள் நிகழ்ந்தன. இச்சமயத்தில்தான் துரத்துக்குடியில் டச்சுக்காரரும், பாண்டிச் சேரியில் பிரெஞ்சுக்காரரும், சென்னையிலும், திருச்சியிலும் ஆங்கி லேயரும் உள்நாட்டுப் பூசல்களில் ஈடுபடத் துவங்கினர். அவர்கள் தங்கள் நாட்டில் உற்பத்தியான உபரிப்பொருள்களை இங்கே விற்கவும், இங்கிருந்து பருத்தி முதலிய பொருள்களே மலிவாகத் தங்கள் நாட்டுக்கு வாங்கிச் செல்லவும் வந்தவர்கள். அவர்களுக் குள் வியாபாரப் போட்டி ஏற்பட்டது. நாட்டில் மத்திய அரசியல் ஆதிக்கம் இல்லை. தென்பாண்டி நாட்டில் பதினெட்டுப் பாளையக் காரர்கள் அவரவர்கள் பாளைப்பட்டுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்கள் அடிக்கடி நிலத்தைப் பிடிப்பதற்காகப் பக்கத்துப் பாளையக்காரர்களோடு சண்டையிட்டுக் கொண்டனர். சில இடங்களில் நாலந்து பாளையக்காரர்கள் தங்களுக்குள் iப்பந்தம் செய்துகொண்டு பிற பாளையங்கள் மீது படையெடு