பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 கும்பினியார் மேலே ஆணையென்று சொல்லி கூறினனே சங்குத் தேவனுந்தான் கும்பினியான தலைக்கு மேலேயென்று கொள்ளையடித்தானே பிள்ளை மகன் பிள்ளைமகன் நெல்லைக் கொள்ளையடிக்கவே பிற்கட்டு மேஷர்தன் சேவுகன்தான் வல்லமையாகவே சொல்லி யெதிர்நின்று வாய்பேசா மன்னன் துரையிடத்தில் 21 60 அல்லல் வருமென்று சொல்லிடவே கட்ட பொம்மு துரைதம்பி யேது சொல்வார். வல்லமைசேர் கர்னல் சென்னல்துரைகளும் வந்தால்வரட்டு மென்றே யுரைத்தார் கொட்டாரம் தன்னிலே கட்டியிருந்திடும் கும்பினியார் சீமை நெல்லையெல்லாம் பட்டப்பகலிலேதான் கொள்ளை கொண்டான், வெளிப்பட்டரை நெல்லையுங் கொள்ளைகொண்டான். ஆயிரதஞ்நூறு கோட்டை நெல்லை அரை நாழிகையில் வாரிக்கொள்ளை கொண்டான் 2 170 பாயும்புலிபோல ஊமைத்துரை வீர பாண்டியன் சமர்த்துகளேது சொல்வார். ஊமைத்துரைப் பேச்சு வானம் பொழிந்தது பூமிவிளைந்தது மன்னவன் கும்பிணிக்கேன் கொடுப்பேன் ? சீனிச்சம்பா நெல்லுஏன் கொடுப்பேன் தம்பி சீரகச்சம்பா நெல்லு ஏன்கொடுப்பேன் ? தானியதவசமும் ஏன்கொடுப்பேன் நமது சாமியோ பூதமோ தம்பிரானே ? நானும் உழுது விதைக்கும் போது அவன் தானும் உழவுக்கு வந்தானே?" 2 I 80 உழவு தலைக்குத் தான் வந்தானே நமது உழப் பெருதுகள் மேய்த்தானே ? களைகள் முளைகள் எடுத்தானே நமக்கு கஞ்சித் தண்ணீர்க் கொடுத்தானே ? சனமோ சாதியோ கும்பினியான் நமது சம்பந்தக் காரனே கும்பினியான், ?