பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 மாட கூட மணி மேடையிலே அங்கே மதிலில் குண்டுகள் தைத்திடுமாம் வாசல் கொத்தாளத்தில் குண்டுகள் தைத்துச் சன்னல் வழிகள் போலே தெரிந்திடுமாம். 26 5s; ஆசார வாசலலைந்திடுமாம் கோட்டை வாசற்படிகள் தகர்ந்திடுமாம். மக்காளிதுரை மக்களிட்டுத் துரை கக்கி சக்காரன் பார் காலன் துரை லெக்கை கட்டியேற வேணு மென்று துரை லக்கமாரென்று வரும் போது, கோட்டைக்குள்ளே நின்று கம்பளத்தார் சற்றே குலவை யிட்டவர் சுட்டனராம். கோட்டைக் கதவு தெறித்திடவே அங்கே கூ வென்று வந்ததே பட்டாளம். 2 66 0. பாளையம் வாரதை கண்டு ஊமைத் துரை பல்லை நறநறென்றே கடித்தார். வேளேக்குதவிய காவல்காரன் மகன் வெள்ளையன் முன்னேடியே குதித்தான். கம்பளத்தாரொரு கும்பலாக வலு கைக்கார ரெல்லோரும் தென்பாக கும்பினிப் பாளையத்துாடே தான் வெள்ளேயன் குல்லிலி யென்று குலவை யிட்டான் மறவர் குலத்தில் பிறந்திட்ட வெள்ளையன் வைரி போல் பறந்தடிக்கலுற்ருன் 2670 பாரு பாரென்று கை முறுக்குகிருன் பல்லைக் கடித்தங்கே நொறுக்குகிருன். படபடென்றெங்கே தான் துடித்தான் துரை பட்டாளத்தை வெட்டித்தான் முடித்தான். குடுகுடென்றங்கே பாயுகிருன் ஈரல் குலையிலே குத்திச் சாய்க்குகிருன். வானிலிடி போல முழங்குகிருன் சண்டை வளர்க்குகிருன் குத்தியிழுக்குகிருன். என்றிவன் செய்யும் சமர்த்துகள் தன்னை என்னவென்று சொல்வேன் நல்லோரே 2680