பக்கம்:வீரபாண்டியம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சி வி ய ம் I I தால், வெறுக்கின்ருேம்; வருந்தில்ை, வருந்துகின் ருேம்: உவங்தால், உவக்கின்ருேம்; அழுதால், அழுகின் ருேம்: அவன் மானத் துடிப்போடு வீறுகொண்டு எழுங்தால் காமும் வீராவேசமாய்ச் சிறி எழுகின் ருேம்: இன்ன வாறே என்ன என்ன விதமாகவோ காவிய மனிதன் ஒவிய உருவமாய் நின்று நம் உள்ளங்களே உருக்கி உணர்ச்சிகளேப் பெருக்கி நம்மை எவ்வழியும் செம்மை யாக உயர்த்தியருளுகின்ருன். மொழிகளின் வழியே உணர்வின் எழில் ஒளிகள் எதிர் வீசி வருகின்றன. விற்பன விவேகம் விரிந்து வருகிற கவி ஒர் அற்புதக் கற்பகமாய் அதிசய இன் பங்களே விளேத்து அருளுகி றது. அந்த இன்ப விளேவுகளில் அன்பும் அறமும் பண் பும் பரிவும் அறிவும் அமைதியும் பரவி வருகின்றன. வசன நடையினும் கவியே சுவையும் இனிமையும் சுரங்து உணர்வு நலன்கள் கனிந்து எவ்வழியும் உவகை புரிந்து வருகின்றது. இதனே ஒர் உவமான கிலேயால் தெளிவாக நேரே தெரிந்து கொள்ளலாம். பாட்டும் வசனமும். நாட்டியமே பாட்டு; நடையே வசன மாம்; காட்டிய இவ்வுவமக் காட்சியால்-பாட்டியல்பின் மாட்சிகளே எல்லாம் மதியூக மாய்ஒர்ந்தே ஆட்சி புரியும் அறிவு. கவியின் உயர்வையும் வசன நடையின் இயல்பை யும் இக் கவி சுவையாய் விளக்கியுளது. உவமான உப மேயங்கள் உணர்வு நலன்கள் நிறைந்து உறுதி உண் மைகள் செறிந்து உவகை சுரங்து திகழ்கின்றன. ஒரு பெண் கடந்து போவது போல் வசன நடை இசைந்துள்ளது; அழகிய ஒரு பருவ மங்கை எழிலோடு காட்டியம் ஆடுவது போல் பாட்டு அமைந்துள்ளது. கடக்கின்ற பெண்கள் எல்லாரும் நாட்டியம் ஆட முடியாது: எழுதுகின்றவர் எல்லாரும் நல்ல கவி பாட முடியாது. இருவகை கிலேயும் கருதி உணர வுரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/10&oldid=912474" இலிருந்து மீள்விக்கப்பட்டது