பக்கம்:வீரபாண்டியம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 2 கா வி ய சீவி ய ம் நாட்டியம் ஒரு கல. பரதமும் இசையும் பயின்று முயன்று பெற வுரியன. எத்தகைய பயிற்சி முயற் சிகள் படிந்தாலும் சிலரே அவற்றில் உயர்ச்சி அடைந்து ஒளி மிகுந்து வருகின்றனர். பாட்டும் அவ்வாறே அருமைப்பாடு உடையது. கற் றுத் தேர்ந்த பெரிய புலவர்களும் பாட்டுப் பாட நேர்ந்த போது படாத பாடுகள் படுகினறனர். அவர்கள் படுகின்ற அந்தப்பாடு கவியின் இயல்பான உயர்வு களே நயமாய் விளக்கி வருகின்றது. எதுகை மோனேகள் இணேந்து புதுமையாய்ப் பிணந்து வரினும் அது பாட்டு ஆகாது. உணர்வின் ஒளியும் உயிர் ஒட்டமும் ஓங்கி வருவதே உயர்ந்த பாட் டாம். அறிவின் சுவையும் ஆன்ம இன்பமும் சுரக்து வரும் அளவே கவி சிறந்து மிளிர்கிறது. வயிரம் மாணிக் கம் முதலிய மணிகளேப் போலவே கவிகளும் கூர்ந்து சோதனை செய்து தேர்ந்து தெளிய வுரியன. உயிர்களே உயர்த்தி வருதலால் கவியுள் ஒரு தெய்வ ஒளியுளது. அரிய இனிய அது விளேங்து வரு லெம் விழுமிய கிலேயமாய் விளங்கி வருகிறது. கவிஞர் பெருமான் என்பது சிவபெருமானுக்கு ஒரு பெயயாய வந்துள்ளது. ஆகவே கவி எத்தகைய மகிமை யும் மாண்பும் உடையவன் என்பதை ஈண்டு உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். கருவிலேயே திருவை மருவி வருதல்போல் பிறப்பிலேயே கவிஞன் சிறப் பாய்ப் பேறு பெற்று வரவேண்டும். அத்தகைய பேரு ளனே யாண்டும் எனறும் சீரோடு சிறந்து வருகிருன். கவித் தன்மையைக் கல்வியால் முயன்று ஒரளவு பெறலாம் ஆயினும் அது, அப் பேரளவே கின்றுவிடும். அரிய பெரிய மேன்மையை அதல்ை பெற இயலாது. உத்தமமான வித்தகக் கவிஞய்ை எத்தகையோரும் என்றும் வியந்து புகழ்ந்து உவந்து வர ஒருவன் உயர்ந்து வருவது தெய்வத் திருவருளாலேயாம். தெய்வ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/11&oldid=912485" இலிருந்து மீள்விக்கப்பட்டது