பக்கம்:வீரபாண்டியம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சீ வி ய ம் H.32 ஒளி மேவிய அளவு அவன் திவ்விய கவி ஆகின்ஞன். அதிசயமான ஒர் அறிவு மணம் மருமமாப் மருவி வருத லால் அவனுடைய கவிகள் எவ்வழியும் செவ்வையாய் விழுமிய கிலேயில் தேசு வீசி வருகின்றன. வருந்தி முயன்று பலர் பலவழிகளிலும் தலைவிரி கோலமாய் அலேந்து திரிந்து அல்லும் பகலும் ஆவ லோடு பொருளே ஈட்டி வருகின்றனர்: வரினும் சிறந்த செல்வராய் அவர் உயர்ந்து கொள்வதில்லை. சிலர் பிறப்பிலேயே அரச திருவுடன் பிறந்து யாண்டும் செல்வச் சீமான்களாய்ச் சிறந்து விளங்கு கின்றனர். அரிய கவிஞனும் இவ்வாறே பிறப்பின் பேருய்ப் பெரிய சிறப்பினே அடைந்து திகழ்கின்ருன். A poet is born, not made. (Anon) ' கவிஞன் பிறந்து வருகிருன்: முயன்று வருவது இல்லை' என இது குறித்துள்ளது. இலத்தின் மொழியி னர் இதனே ஒரு பழமொழியாக வழங்கி வருகின்றனர். கலேத்துறையில் கிலேத்த உண்மையை எந்த நாட்ட வரும் சிந்தை ஒர்ந்து தெளிந்து மொழிந்து வருவது விந்தையாய் விளங்கி வருகிறது. அறிவின் நுகர்வு கவிகளின் சுவைகளேக் கருதி நுகர்பவர் உணர்வின் ஒளிகளே மருவி மகிழ்கின்றனர். அறிவு தெய்வத் திரு ஆதலால் அதன் வழியே பெருகி வருவது விழுமிய இன்பங்களே விளேத்தருளுகிறது. ஆன்மானங்தத்தின் அருகே மருவி வருதலால் அறி வானந்தம் எவ்வழியும் உயர்வாய் ஒளி மிகுந்து திகழ் கிறது. அறிவின்பம் சுரங்து வருகின்றமையால் கவிகள் பேரின்பமாய் விளங்கி வருகின்றன. கருதி உணருங் தோறும் கவிகள் அருளுகிற அற்புத இன்பங்களைக் கற் பகத் தருவும் தருமா? இனிய கனிகளினும் அரிய கவிகள் அதி மதுரங்க ளுடையன. அளவிடலரிய சுவைகள் நிறைந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/12&oldid=912496" இலிருந்து மீள்விக்கப்பட்டது