பக்கம்:வீரபாண்டியம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Too! கா வி ய சீ வி ய ம் கவி உணர்வு அவி உணவினும் அதிசய இனிமையும் மகிமையும் தோய்ந்து யாண்டும் மேன்மையா யுள்ளது. உணவும் உணர்வும். உணவு உடலை வளர்த்து வருகிறது. உணர்வு உயிரை உயர்த்தி அருளுகிறது. அது மருளோடு களித்து இழிகிறது. இது தெருளோடு திளைத்து உயர்கிறது. அது ஊன நிலையில் ஒழிகிறது. இது ஞான நிலையில் வளர்கிறது. உள்ளம் தோய்ந்து ஒர்ந்து உணர்ந்து வருபவரே கவிகளின் சுவைகளைத் தேர்ந்து தெளிந்து செவ்வையா நுகர்ந்து எவ்வழியும் மகிழ்ந்து வருகின்றனர். படித்தல் I கற்றல் 2 அறிதல் 3 ஆய்தல் 4. உணர்தல் 5. அனுபவித்தல் 6 இந்த ஆறு நிலைகளும் ஈண்டு ஊன்றி உணர வுரியன. கலையறிவின் பயிற்சி வகைகள் இன்னவாறு தெரிய வந்துள்ளன. பயின்று வருகிற பான்மை அளவே மேன் மைகள் விளைந்து வருகின்றன. மேல் எழுந்த படியே எழுத்தைப் படித்துப் போதலே யாவரிடமும் அழுத்த மாய்ப் படிந்து எங்கும் முடிந்து வருகிறது. கற்கும் வகை. உள்ளம் படியாத படிப்பு எள்ளல் படிந்து இழிந்தே போகின்றது. அந்தப் போக்கை நோக்குவாரும், அதனே நீக்கி ஆக்கம் பெறுவாரும் அரியரா யுள்ளனர். மாய மருள்கள் திய இருள்களாய்ச் சூழ்ந்து வருதலால் அறி வுரியதை அறியாமல் அவமே போகின்றனர். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/13&oldid=912507" இலிருந்து மீள்விக்கப்பட்டது