பக்கம்:வீரபாண்டியம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சீ வி ய ம் H5. படித்தவரினும் கற்றவர் உயர்ந்தவர். கற்றவரினும் அறிந்தவர் சிறந்தவர். அறிந்தவரினும் ஆய்ந்து தெளிபவர் மேலானவர். ஆய்பவரினும் ஒர்ந்து உணர்பவர் தேர்ந்தவர். ஓதி உணர்ந்தவரினும் துாயராய் ஒழுகுபவர் உத்தமர். கலேயுணர்வின் கிலேகள் எல்லாம் ஆன்ம நலனே அருளி வரவே பான்மை சுரந்து வந்துள்ளன. அங்த வரவுகளேச் சிந்தனே செய்து தெளிந்து வருபவரே எந்த வகையிலும் நன்கு சிறந்து வருகின்றனர். ஒரு நல்ல கவியைக் காண நேரின் அதன் சொல் &லயும் பொருளேயும் குறிப்பையும் கருத்தையும் கூர்ந்து ஒர்ந்து உள்ளம் தேர்ந்து உண்மையை உறுதியா உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ள நேர்ந்தால் கவியின் சுவையும் கருத்தும் குறிப்பும் உணர்வும் அங்கே உயர் பேரின்பம் சுரங்து வரும். கருதி நுகர்வது. துண்மையாய்க் கருதி உணரும் அளவே உண்மை யான உறுதி நலன்கள் தெரிய வருகின்றன. கருதா வழி யாவும் விருதாவாய் விலகி ஒழிகின்றன. கருத்து ஊன்றி ஒரு பக்கம் படிப்பவன் கருதாமல் ஆயிரம் பக்கங்களைப் படிப்பவனேக் காட்டிலும் மேலான அறி வாளியாய் விளங்கி நிற்கின் ருன். அனுபவ உணர்வே மனிதனேப் புனிதனக்கி அருளுகிறது. அறிவோடு உரிமையாய்ப் பழகி வருகிற பழக்க வாசனையே அனுபவமாய் மருவி இனிமை சுரங்து வருகிறது. உள்ளம் துய்மையாய் உணர்வு தெளிந்து வரின் அந்த உயிர் பேரின்ப வெள்ளத்தைப் பெற நேர்கின் றது. இனிய சீவ ஒளி அரிய தேவ ஒளியாகிறது. உணர்வின் பயன். கல்வியறிவு, கலைஞானம் எனத் தலைமையாக ԱԱ TE:Ա ரும் புகழ்ந்து வருகின்றனர். மேலான இங்த அறிவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/14&oldid=912518" இலிருந்து மீள்விக்கப்பட்டது