பக்கம்:வீரபாண்டியம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 காவிய சீ வி ய ம் மெய்யான பயன் யாது? உயிர் துயர் உருமல் உய்தி புறச் செய்து கொள்வதேயாம். இவ்வாறு செய்து கொள்பவரையே மகான்கள், ஞானிகள், சீவன் முத்தர் கள் என்று வையம் வாழ்த்தி வருகிறது. ஆன்ம உய்தி அதிசய இன்பமாய்த் துதி செய்யப் பெறுகிறது. கோடி கோடியாய்ச் செல்வங்களே ஈட்டிக்கொண் டாலும், அரிய பெரிய அரச பதவிகளே அடைந்தாலும் தன் உயிர் துன்பம் தோயாமல் இன்பம் தோயச் செய்து கொள்ளாது ஒழியின் அந்த வாழ்வு நல்ல வாழ் வாகுமா? அல்லலான அவல வாழ்வேயாம். அவரும் அரிய பயனே இழந்த வறியரே யாவர். பாழான அவர் பரிதாபமாய் இழிந்து கழிந்து அழிந்தே போகின் ருர். பிறந்த பிறவிக்குச் சிறந்த உயர்ந்த பயன் என்ன? பின்பு பிறவாத பேரின்ப கிலேயைப் பெறுவதேயாம். இக்காவியத்தின் நோக்கம். இந்த வீர காவியம் ஒர் அரசனுடைய சீவிய வர லாறுகளே மாத்திரம் கூறுவதோடு அமையாமல் மனித சமுதாயம் இனிது தெளிந்து புனித நிலை யடைந்து உய்திபெற உரிய உறுதி நலன்களே இடங்கள் தோறும் உரிமையுடன் தெளிவுறுத்தி யுள்ளது. ஓதி உணர்பவர் எவரும் இந்த உண்மையை நேரே காண நேர்வர். சிந்தனை செய்க. ஏறக்குறைய எண்ணுாறுக்கு மேலான கவிகள் இக் காவியத்துள் யாவரும் கருதியுணர்ந்து மனனம் செய்து கொண்டு யாண்டும் சிந்தித்துத் தெளிந்து வர வுரியனவாய்ச் சிறந்துள்ளன. உயர்ந்த உணர்வு நலன் களே ஒர்ந்து வருபவர் தேர்ந்த மேலோராய்ச் சிறந்து திகழ்கின்றனர். தெய்வ அருளும் எய்துகின்றனர். உள்ளத்தை உயர்த்தி, உணர்வை ஒளி செய்து, உயிர் துயர்நீங்கி, உய்தி பெறச் செய்து வருவதே மெய்யான காவியமாம். இதனைக் கருதித் தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/15&oldid=912529" இலிருந்து மீள்விக்கப்பட்டது