பக்கம்:வீரபாண்டியம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சீ வி ய ம் 17 ஆன்ம நலனே அருளி வரும் அளவே கலேயும் கவி களும் நிலையான மேன்மைகளே எய்தி வருகின்றன. உலகப் பொருள்கள் எவற்றினும் உடம்பே மனித துக்கு நெருங்கிய உரிமையான உடைமையாம். இந்த மெய்யுள் மெய்யாய் மேவி யுள்ள சீவனைப் புனிதமா இனிது பேணி வருபவன் தேவய்ைச் சிறந்து திகழ் கின்ருன். ஆன்மா பரமான்மாவின் இனமே. அறிவு என்பது பரமனது ஒளித்து வரியே. பறவை விலங்கு முதலிய வேறு பிராணிகள் எவற்றினும் மனித இனமே இதனைப் பெரிதும் மருவி வந்து ளது. இந்த அரிய அறிவுக்கு உரிய பயன் என்ன? கருதி உணர வேண்டாமா? உறுதி தெரிவதே உய்தி புரிவதாம். ஆறு அறிவுடையய்ைப் பிறந்துள்ள மனிதன் தனது இனிய உயிர்க்கு உரிய உறுதியை அறியான பின் ஒரறிவும் இல்லாதவனாய் ஒழிய நேர்கிருன். அறிய கேரின் பேரறிவாளய்ைப் பெருகி உயர் கிருன். அறி பவர் யாண்டும் அரியராய் அருகி ஒழிகின்றனர். அறி யாமை பெருகி யிருக்கும் வரையும் எவ்வழியும் பரிதா பங்களே மருவி நிற்கின்றன. பிறவியில் நேர்ந்துள்ள தன் நிலைமையை எந்த மனிதன் சிந்தனே செய்ய நேர்கின் ருனே), அந்த மனி தன் அந்தம் இல்லாத பேரின்ப நிலையை அடைய வுரிய தகுதியை நேரே அடைந்தவனகின்ருன். உண்மை உணர்வு எவ்வழியும் நன்மையாய் உய்தி புரிகின்றது. எண்ண வேண்டியதை எண்ணி உணர் பவன் புண்ணியவாய்ைப் பொலிந்து திகழ்கின்ருன்: எண்ணுதவன் மண்ணுய் மடிந்து போகின்ருன். எண்ண உரியன. எங்குமுன் இருந்தோம்? எங்குஇனிப் போவோம்? என்பதை இறைஅள வேனும் தங்கிமுன் உணரார்; தம்நிலைக்கு இரங்கார்; தருக்கிலும் களிப்பிலும் தழைத்துப் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/16&oldid=912540" இலிருந்து மீள்விக்கப்பட்டது