பக்கம்:வீரபாண்டியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கா வி ய சீ வி ய ம் பொங்கிநிற் கின்ருர்; போயிழி கின்ற புலன் ஒன்றும் தெரிகி.லார்; புலேயாம் இங்கிவர் நிலையை எதிர்அறிந்து ஒர்ந்தால் இங்ங்னம் இருப்பர்கொல்? இவரே! (1) எண்ணுவார் எவரே? என்னதாம் பெற்ருேம்? இதுவரை வாழ்ந்தோம்; எதன்பொருட்டு இங்குநாம் வந்தோம்? அன்னேயும் பிதாவும் அன்புடை மனையும் அறிவுறு மக்களும் தமரும் முன்னம்எத் தனை பேர் மொய்த்தமர்ந் திருந்தார்? முறையுடை அவரெலாம் எங்கே? இன்னம் எத்தனை பேர் எய்திட நின்ருர்; என்பதை எண்ணு வார் எவரே? (2) மடமை மருள். கருவினுள் அழிந்தும், கண்டபின் அழிந்தும், கவினுறு குழவியாய் அழிந்தும், மருவிய பாலன் குமரய்ை அழிந்தும், வன்பெருங் கிழவய்ை அழிந்தும், ஒருநிலை இன்றி அழிவையே உடையில் உலகினை உறுதியா நம்பி வருநிலைக் குரிய நலன் ஒன்றும் இன்றி வறியராய் வாழ்வதே மடமை. (3) மானிடர் இயல்பு. இன்பமே வேண்டி நிற்கும் இயல்பினே யுடைய மாந்தர் துன்பமே அடையத் தக்க தோமினே விளைத்து நின்ருர்; நன்பயன் உடைய மாவின் நறுங்கனி வேண்டி எட்டி வன்படு விதையை நட்டு வளர்க்கின்ற மடவோர் அன்றே? உயிர் வாழ்வு. பொள்ள லார் குடம் நிறைந்த புனல் எனப் புரை கொள் யாக்கை உள்ளமர் உயிரின் வாழ்க்கை உறைந்துளது; ஒழுகி நாளும் தள்ளுறக் கழித்ல் தேற்ருர்; சாலவும் தருக்கி நின்ருர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/17&oldid=912551" இலிருந்து மீள்விக்கப்பட்டது