பக்கம்:வீரபாண்டியம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கா வி ய சீவி ய ம் தினைஅளவேனும் எண்ணுக. வந்து வந் திந்த மண்ணினை ஆண்டு மண் ஆகி முந்து போய்முடிந்து ஒழிந்தவர் தமைஎலாம் முறையே சிந்தை யுள்ளுறத் தினையளவு எண்ணினும், செருக்கை எந்த மன்னனும் எங்குமே கொண்டிடான் என்றும். (10} யாவும் உடையவன் ஒருவனே. யாவு மேமுழுது உடையவன் ஒருவனே ; அவன்கை மேவி யுள்ளதை உயிர்களின் நல் வினேக்கு ஈடாத் துரவு கின்றனன்; அப்பெருந் துாவலில் சிலபேர் கோவெ னப்பெயர் கொண்டிறை குலாவுகின் ருரே. (11) தலைமையான அரசர் கிலைமை. நீரில் தோன்றிய மொக்குளுள் பெரிதுஎன நிமிர்ந்து பாரில் தோன்றிய நரர்களுள் அரசர்கள் பதிந்தார்; காரில் தோன்றிய மின் எனக் கடிதினில் மறைந்து வாரிப் போமிதை வரவென மதிப்பர்கொல்? மதியோர். (12) சிந்தனை செய்து தெளிக. வந்த காரியம் எதற்குநாம் வருமுனம் எங்கே சொந்தமா யமர்ந் திருந்தனம்? தொல் நிலை என்னே? இந்த வாழ்விடை இரண்டுநாள் இருந்தபின் இனிமேல் அந்த மாயடைந்து அமர்நிலை யாது? என அறியோம். (18) துரும்புஎனச் சுழல்கின்ருேம். * சண்ட வெங்கடுஞ் சுழலினுள் சார்ந்தமென் துரும்பு விண்டி டாது.அயல் அதன்வழி விரைந்துஒழி வின்றி மண்டி ஒடிவெங் கறங்குஎன மறிந்துழன்று அகலந்து தண்டி டாதுறல் போலுயிர் தனே மறந்து உழலும். (14)

  • கொடிய குறைக் காற்றில் அகப்பட்ட துரும்புபோல் பிறப்பு இறப்பு ஆகிய நெடிய சுழலில் சிக்கி சீவன் ஓயாது சுழன்று உழன்று திரிகிறது. அல்லலான இந்த அவலத் துய ரங்களே யாதும் அறியாமல் மருண்டு களித்து மயங்கி எவ் வழியும் மறந்து இழிந்து கழிந்து உழலுவது மாய மயக்கமாய் நீண்டுள்ளது. பொல்லாத இந்தப் புகலத்துயர் அடியோடு ஒழிவது என்று? தன்னைத் தெளிவாக ஒருவன் அறிய நேர்ந்த போதுதான் இந்த அழிதுயர் ஒழிய நேர்கின்றது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/19&oldid=912573" இலிருந்து மீள்விக்கப்பட்டது