பக்கம்:வீரபாண்டியம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சீவி ய ம் 空覆 தன்னே அறிவது என்ருல் என்ன? உடம்புள் உறைத் துள்ள உயிரை உண்மையாக உணர்ந்து தெளிவதே தன்னை அறிவதாம். உயிர் புனிதமானது; உணர்வு நலம் உடையது; என்றும் அழியாதது; எல்லாம் வல்ல இறைவனுடைய உற வாயுள்ளது; அந்தப் பரஞ்சோதியி லிருந்து சிதறிய சிறிய ஒரு ஒளித்துளியே சீவான்மா என மேவியுளது; இந்த உண் மையை உணர்வதே மெய்ஞ்ஞானமாம்: தூய இந்த ஞான ஒளி தோன்றியபோதே தீய மாய இருள் மாய்ந்து ஒழிந்தே போம்; போகவே ஏக பராபரமாய் இன்பம் பெருகி வரும். நிலைமையை கினைந்து தெளிக. தனே மறந்து,தன் தலைமையை மறந்து,முன் நின்ற நினைவு யாவையும் நீளவும் மறந்து,வெம் மாய இ&னய வாழ்வினை இடையினில் எதிர்ந்துளோம்; இதினும் புனேயும் நல்வினை புரிகிலம் ஆயின் என் புகுமோ? (15) கல்வியும் செல்வமும். கல்வி யின்பயன் ஒழுக்கமும் அறிவுமே; கண்ட செல்வ நன்பயன் ஈதலும் துய்த்தலு மேயாம்; இல்லை யேல் அந்த இருபெருஞ் செல்வமும் இழிந்து புல்லி தாகிய பழிமிகப் போக்கொடு போகும். (16) ஒழுக்கம் உயிர்க்கு ஒளி புரிகிறது. அறிவு உடலை வளர்க்க உதவுகிறது. ஈதலும் துய்த்தலும் இம் முறையி லேயே உள்ளன. உண்மையை ஒர்க; நன்மையைத்தேர்க. | மூதறிவாளன். மன்னு யிர்க்கிதம் செய்பவன் மாநிலத்து என்றும் தன்னு யிர்க்குயர் தனிப்பெரும் பதத்தினைத் தகவாய் முன்னம் ஆற்றிடும் மூதறி வாள னே யாவான்; அன்ன வன் உயர் நிலையினே யாரள விடுவார்? (173 பெரிய மேன்மைகள் பெறுபவன். அரிய பேறுகள் அனைத்தையும் எளிதினில் எய்திப் பெரிய மேன்மைகள் பெற ஒரு வழியுளது; அதுதான் உரிய தன் மனே அன்றி மற் றுள்ளவர் எல்லாம் பிரியம் மேவிய தாய்தங்கை என்றுபே ணுதலே. {18}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/20&oldid=912585" இலிருந்து மீள்விக்கப்பட்டது