பக்கம்:வீரபாண்டியம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.翌2 காவிய சீவி ய ம் கற்றவன் யார்? பெற்ற தாய் எனப் பிறர்மன் எண்ணுவோன்; பிறர்கை உற்ற ஒண்பொருள் ஒடுஎன உணருவோன்; உலகில் மற்ற யாவையும் தன்னுயிர் ஆமென மதிப்போன்; கற்றவன்; அவன் கருதரும் பேரின்பம் கண்டான். (19) பிறவியின் பயன். அந்தம் இல்லதோர் ஆண்டவன் ஒருவனே நமக்குத் தந்தை; இங்குள யாவரும் சகோதார் என்றே சிந்தை செய்துமெய் அன்புடன் இதம்செய்க; சேர்ந்து வந்த இப்பெரும் பிறவியின் பயனது வாமே. (20) இந்தப் பாசுரங்களே வா சி த் து ப் பாருங்கள்: பொருள்களை யோசித்துச் சிந்தியுங்கள். உண்மையை உணர நேரின் உள்ளம் உருகித் தெளிய நேர்வர். உள்ளம் படியாமல் வெள்ளோட்டமாக இப் பாட் டுக்களைப் படித்துப் போகலாமா? அவ்வாறு போல்ை ஒரு வார்த்தை ஏனும் நல்ல பலனே வார்த்து அருளுமா? தரும நீதிகளும், நெறி நியமங்களும், மானச நீர்மை களும், ஆன்ம தத்துவங்களும் இக்காவியத்துள் எங்கும் பொங்கி இனிய சீவிய ஒளிகளே நன்கு வீசி யுள்ளன. க வி. கவி என்ருல் என்ன? அரிய அறிவு நலன்களே மனி தனுக்கு இனிமையாக அருளி வருவதே கவி என மருவி வந்துளது. எழுத்து அசை சீர் தளே அடி தொடைகளால் அழகுற அமைந்து விழுமிய பொருள் வளங்கள் பொலிந்து உணர்வொளிகள் எங்கணும் வி ள ங் கி வருவதைக் கவி என வழங்கி வருகிருேம். அறிவின் சுவைகள் கவிந்தது, அரிய கவின்கள் நிறைந்தது, பெரியோர் கவனத்தால் விளைந்தது என் பதைக் கவி என்னும் பெயர் விளக்கி யுளது. காரணக் குறி அதன் பூரணமான நிலைமையைத் துலக்கித் தலைமையோடு தழைத்துச் செழித்து கிற்கிறது. ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/21&oldid=912600" இலிருந்து மீள்விக்கப்பட்டது