பக்கம்:வீரபாண்டியம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சீ வி ய ம் 2$ உருவ அழகும் குணநலன்களும் கிறைந்த விழுமிய ஒர் அரச குல மகன் போல் நலமான கவி கம்பீரமாய் நிலவி உலாவுகிறது. உணர்வின் ஒளிகள் கிறைக்து உலகம் நலமுற வருவதே விழுமிய கவியாம். கவியின் நீர்மை. புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்ருகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவிச் சவியுறத் தெளிந்து தண் என்று ஒழுக்கமும் தழுவிச் சான்றேர் கவிஎனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார். (இராமாயணம்) கோதாவரி நதிக்குக் கவியை இவ்வாறு கவிஞர் பெருமான் நயமாக உவமை கூறியுள்ளார். உலகுக்கு அணி செய்வது; உயர் பொருள்கள் தரு வது; உணர்வுகலம் உடையது: இனிய துறைகள் தோய்ந்தது; நெறி நியமங்கள் வாய்ந்தது: ஒளி மிகுந்து தெளிந்தது: நீர்மை சீர்மைகள் நிறைந்தது: தண்மையும் வண்மையும் உண்மையும் ஒழுக்கமும் தழுவியது என உணர்த்தி யிருப்பதைத் தனித் தனியே துணித்து உணர்ந்து கொள்ள வேண்டும். பொருள் கயங்களே ஒர்ந்து வரும் அளவே தேர்ந்த தெருள் ஒளிகள் நேர்ந்து யாண்டும் ஆர்ந்த இன்பங்களே அருளி வருகின்றன. கோதாவரி, சீவ நதி. கவி, தேவ நிதி. பயிர்களும் உயிர்களும் உவந்து வாழ்ந்து வர கதி நீர் எங்கும் என்றும் பரவி அருளுகிறது. மாங்தர் யாவ ரும் யாண்டும் பான்மை கிறைந்து மேன்மை சுரங்து மேலோராய் உயர்ந்து சால்போடு விளங்கி வரக் கவி எவ்வழியும் செவ்வையாய் அருள் புரிந்து வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/22&oldid=912621" இலிருந்து மீள்விக்கப்பட்டது