பக்கம்:வீரபாண்டியம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.24 காவிய சீவி யம் சிறந்த ஆற்று நீர்க்கு உயர்ந்த கவி ஈண்டு உவ மானமாய் வந்துள்ளது. நீர் மை சீர்மைகளைக் கூர்மை யாய் ஒர்ந்து உணர்பவர் கவியின் மகிமை மாண்புகளேத் தேர்ந்து தெளிந்து கொள்வர். உவமேயத்தினும் உவ மானம் உயர்ந்த நிலைமையும் தலைமையும் உடையது. இருவகை நிலைகளையும் துருவி உணர்பவர் பொருள் களின் இயல்புகளைத் தெளிவாகத் தேர்ந்து உள்ளம் உவந்து வியந்து கொள்ளுவர், கதி நீர் புற உலகை வளர்த்து வருகிறது; கவி நீர் அக உலகை உயர்த்தி யருளுகிறது. அது கிலத்தில் பாய்ந்து வருகிறது: இது நெஞ்சத் தலத்தில் தோய்ந்து திகழ்கிறது. சான்ருேர் கவி என்ற குறிப்பு இங்கே ஊன்றி உணர வுரியது. அரிய இனிய கவியை அருள உரியவர் யார்? என்பதை இப் பேர் தெரிய விளக்கி யுளது. சான்ருேர் என்ற பதம் ஆன்ற பொருள்கள் உடை யது. சால்பு என்னும் பண்பிலிருந்து இப்பெயர் தோன் றியுள்ளது. சால்பு= அமைதி நிறைவு. அரிய பல குணநலன்கள் இனிது நிறைந்தபெருந்தகைமையாளரே சான்ருேர் என வான்தோய் புகழுடன் விளங்கியுள்ள னர். இத்தகைய உத்தமர்களிடமிருந்து உதயமாகி வருகிற கவிகளே உலக ஒளிகளாய் நிலவி வருகின்றன. இன்பம் இனிது அருளுவது. நிறையுடைக் கல்வி பெறுமதி மாந்தர் ஈன்றசெங் கவிஎனத் தோன்றி.நனி பரந்து, பாரிடை இன்பம் நீளிடைப் பயக்கும் பெருநீர் வையை வளைநீர்க் கூடல் உடல் உயிர் என்ன உறைதரு நாயகன். (கல்லாடம் : 2) வையை நதிக்குக் கவியை இவ்வாறு கல்லாடர் உவமை கூறியிருக்கிரு.ர். மதுரை மாநகருக்கு உயிர் ஆய் ஒளி செய்து இருப்பது சோமசுந்தரப் பெருமான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/23&oldid=912637" இலிருந்து மீள்விக்கப்பட்டது