பக்கம்:வீரபாண்டியம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சீ வி ய ம் 25 இந்த நகருக்கு வளமாய் அழகு செய்துள்ளது வையை மாதி; இந் நதி எத்தகையது? முத்தமிழ்த் துறையின் முறை போகிய உத்தமக் கவிஞர் அருளிய கவிபோல் சுவையாய் நீர்மை சுரந்துளது எனச் சீர்மையா விளக்கி யுள்ளார். விளக்கங்கள் வியந்து சிந்திக்க விளங்தன. பார் இடை இன்பம் நீளிடைப் பயக்கும் எனக் கவி யும், நீரும் இவ்வாறு காண வந்துள்ளன. பார்= பரந்து விரிந்துள்ள உலகம். உயிர்களுக்கு உயிராதாரமாயுள்ள ருேக்குக் கவியை உவமை காட்டியிருப்பது கருதியுணா வுரியது. உண்மை தெரியவரின் உவகை பெருகி வரும். தண்ணிர் தாகத்தை நீக்கும்; தளர்வைப் போக்கும். கவி சோகத்தை நீக்கும்; சுகத்தை ஆக்கும். உயிர் இனங்களுக்குச் சுகத்தை ஆக்கி வருவதில் நீரும் கவியும் ஒப்பாயினும் அதனினும் இது செப்பம் மிசவுடையது. அறிவின்பம் பெருகிவர ஆன்ம நலனேக் கவி அருளி வருதலால் இதன் உயர்வையும் ஒளியை யும் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். எற்பொரு நாகர்தம் இருக்கை ஈது எனக் கிற்பதுஓர் காட்சியது; எனினும், கீழுறக் கற்பகம் அனே யஅக் கவிஞர் நாட்டிய சொற்பொருள் ஆம் எனத் தோன்றல் சான்றது. பம்பைப் பொய்க்கைக்குக் கவி இங்ங்னம் உவமை யாய் வந்துள்ளது. ஆழமான அந்த நீர் கிலே மிகவும் தெளிந்திருந்தது. அந்தத் தெளிவைத் தெளிவாக விளக்கி யிருக்கிருர். மேலான கவிஞர் அருளிய கவி' ஆழமான பொருள்களே உடையது; ஆயினும் யாதும் ஐயுருதபடி எவ்வழியும் தெளிவாய் ஒளி செய்து நிற்கும் உயர் நீர்மை வாய்ந்தது. ஆகவே அந்தத் தெளிந்த நீர் நிலைக்கு உயர்ந்தோச் கவி ஒப்பாய் வந்தது. அரிய நீர் நிலைகள் இனிய சுவையாய் எவ்வுயிர்க் கும் இதம் பயங்து வருகின்றன. சீவாதாரமாயுள்ள தண்ணிரின் தகைமையைத் தெளிவாக விளக்குதற்குக் 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/24&oldid=912659" இலிருந்து மீள்விக்கப்பட்டது