பக்கம்:வீரபாண்டியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 காவிய சீ வி ய ம் கவியை இவ்வாறு ஆதாரமா இணேத்துக் காட்டியிருக் கிருர்: காட்டியுள்ள காட்சிகள் யாரும் கருதி உணர்ந்து உறுதி உண்மைகளே ஒர்ந்துகொள்ள நேர்ந்துள்ளன. கற்பகம் அனைய அக்கவிஞர் என்றது அற்புதமான கவிகளே ஆக்கி அருளவல்லவர் யார்? என்பதை நோக்கி உணர வந்தது. உலகம் எல்லாம் உணர்ந்து என்றும் உவந்து வர விளேங்து வருகிற கவிகளின் விளைநிலம் விழுமிய கிலேயில் தெளிவாய் விளங்கியுளது. கற்பகம் என்பது இருபொருள் உடையது. கருதிய எல்லாம் தருகிற தெய்வத் தருவையே கற்பகம் என்பர். கற்பு அகம் எனப் பிரித்துக் கல்வி நிறைந்து கலேஞானம் கனிந்துள்ள உள்ளம் உடையவர் கவிஞர் எனக் காண வந்தனர். உள்ளம் துயராய் உண்மை தோய்ந்துள்ள நல்ல கவிஞரே யாவும் அறிந்து எல்லார்க்கும் இதமாய் யாண்டும் நல்லதைச் சொல்ல வல்லராகின்ருர். “The true poet is all-knowing! he is an actual world in miniature.” (Novalis) "உண்மைக் கவிஞன் எல்லாம் அறிந்துள்ளான்; சிறிய உருவில் பெரிய ஒரு மெய்யான உலகமாய் அவன் மேவியிருக்கிருன்' என்னும் இது இங்கே அறிய வுரியது. மக்கள் தக்கவராய் உயர்ந்து யாண்டும் சிறந்து எவ்வழியும் நல்லவராய் வாழவேண்டும் என்றே கவிகள் மிக்க உரிமையோடு போதித்து வருகின்றனர். அவ ருடைய போதனைகள் வேதனேகளே நீக்கி விவேகங்களே ஆக்கியருளுகின்றன. உயிர்கள் உயர்ந்து வர உள்ளங் களே உருக்கி உணர்வுகளே இனிது உதவி வருகின்றன. உணர்வின் ஒளிகள் உயர் நிலைகளே அருளுகின்றன. “Poets, the first instructors of mankind.” (Horace) 'கவிஞர் மனிதசாதியின் முதன்மையான போத கர்' என இது தெளிவாகப் போதித்துளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/25&oldid=912680" இலிருந்து மீள்விக்கப்பட்டது