பக்கம்:வீரபாண்டியம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சீ வி ய ம் 27 இத்தகைய வித்தக விவேகங்களே உலகத்துக்குப் பொதிக்க வேண்டுமானல் கவிஞர் எத்தகைய உத்தம விலையில் உயர்ந்திருக்க வேண்டும்! "A poet’s soul must contain the perfect shape of all things good, wise, and just.” (Augustine) 'கவிஞன் உயிர் ஞானம் நீதி நன்மைகள் எல்லாம் பூரண உருவமாய்ப் பொலிங் திருக்க வேண்டும்' என இது புகன்றுள்ளது. “Poetry is practical because it fosters sympathy.” வாழ்வின் அனுபவம் வண்கவி; ஆதலால் சூழ்பரிவு நல்கும் தொடர்ந்து. “Poetry was thought the most proper vehicle for conveying their knowledge to posterity.” (Poetry) மாந்தர் அறிவை வருங்கால மக்களுக்கு ஏந்தி யருள்வது பாட்டு. கவிகளையும் கவிஞர்களேயும் குறித்து மேல்நாட் டார் கருதியுள்ள கருத்துக்கள் இவ்வாறு தெரிய வங் துள்ளன. யாவும் செவ்வையாக் கருதி உணர வுரியன. செய்யுள் கவி பாட்டு துரக்கு பனுவல் யாப்பு என்னும் பெயர்கள் காரணக் குறிகள் உடையன. அரிய கலைஞானங்கள் கவிகளில் மருவி யுள்ளன. வாய்மொழிகளின் வழியே தங்கள் வாழ்வுகளே மாந்தர் யாண்டும் நடத்தி வருகின்றனர். அந்த மொழி களில் அருமையாய்த் தோன்றி வருகிற கவிகள் விழு மிய உண்மைகளைத் தெளிவாக விளக்கி என்றும் எங்கும் அவர்க்கு நன்கு ஒளி செய்து வருகின்றன. இத்தகைய கவிகளே அருள வல்ல வித்தக விவேகம் உள்ள உத்தமர்கள் யார்? நல்ல கவிஞர்களே. - க வி ளு ர் . கவிஞர் என்பவர் எவர்? அவர் எத்தகைய கிலே யினர்? கலையுலகில் இனிய உணர்வொளிகளே விசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/26&oldid=912700" இலிருந்து மீள்விக்கப்பட்டது