பக்கம்:வீரபாண்டியம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய சீ வி ய ம் 29 வுரியது. அதிசய நிலைகளில் ஒளி புரிந்து வருபவர் எல் வழியும் எவரும் துதி செய்ய நின்றனர். உலக ஒளிகள். சூரியன் சந்திரன் அக்கினி என்பன உலக இருளே நீக்கியருளும் ஒளிகளாயுள்ளன. இவை புறத்தே படச்ங் துள்ள வையக இருளே நீக்குமே அன்றி மக்கள் அகத்தே புகுந்துள்ள மடமை இருளே நீக்கா. அஞ்ஞான இருளே நீக்கி யருளுவது மெய்ஞ்ஞான ஒளியே. இந்த ஒளிகள் மேலோருடைய மொழிகளின் வழியே வெளியாய் வருகின்றன. மேலோர் கருதி வந்த மேலான எண்ணங்களே நூல்களாய் ஞாலம் அறிய வந்துள்ளன: ஆகவே நூல்களின் சால்புகளே கன்கு தெரிந்து கொள்ளலாம். திருவள்ளுவருடைய அருள் வாக்கைப் பொய்யா மொழி என்று சொல்லுகின்ருேம். ஏன்? வையமையல் களான வெய்ய இருள்களே நீக்கி யருளுதலால் அது மெய்யான ஒளியாய் மேவியுளது. உலக ஒளிகள் செய்ய முடியாத உயர் நிலைகளைக் கவிஞர் வாப்மொழி கள் யாண்டும் நயமாய்ச் செய்தருளுகின்றன. உலக இருள் நீக்கும் ஒளிகள், உயிரின் கலகஇருள் நீக்கா; கவிஞர்-அலகில் மருள்நீக்கி இன்பம் மருவ அருளித் தெருளுக்கி நிற்பர் தெளிந்து. வான சோதியான சூரியனுலும் செய்ய முடியா ததை ஞான சீலங்கள் தோய்ந்த நல்ல கவிஞர்கள் நன்கு செய்து எங்கும் இதம் புரிந்தருளுகின்றனர்.

  • ரவி எறுகநி தாவு கவி எறுகுநு: ரவி சேயநி பநி கவி சேசுநு.’’

சூரியன் அறியாத இடத்தைக் கவிஞன் அறிகிருன்: அவன் செய்ய முடியாத தொழிலே இவன் செய்தருளு கிருன் எனத் தெலுங்கு மொழியாளரும் கவிஞர்களின் மகிமை மாண்புகளே இங்ங்ணம் வழங்கி வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/28&oldid=912741" இலிருந்து மீள்விக்கப்பட்டது