பக்கம்:வீரபாண்டியம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கா வி ய சி வி ய ம் 'உத்யந்து சதமாதித்யா உத்யந்து சத மிந்தவ: ! ந விநா விதுவடிாம் வாக்யைர் நச்யத்யாப்யந்தரம்தம:11’’ “நூறு சூரியர்கள் உதித்தாலும் நூறு சந்திரர்கள் தோனறிலுைம் கவிஞர்களுடைய மொழி ஒளி இல்லே பால்ை மாந்தர் அகத்துள்ள அஞ்ஞான இருள் ஒழி யாது' என இந்த ஆரிய சுலோகம் கூறி யுளது. கதிரவன் கோடி மதியமும் கோடி கதிர்களே விரித்தெழுந் தாலும், அதிர்கடல் புடைசூழ் உலகிடை மனிதர் அகஇருள் அகலுமோ? என்றும் விதிமுறை ஒழுகும் நெறியுடை ஞான வித்தகர் மொழிவழி விரியும் அதிசய ஒளியே அக இருள் நீக்கி ஆனந்த நிலைகளே அருளும். இவை யாவும் இங்கே கூர்ந்து சிந்திக்க வுரியன. உலக உயிர்களுக்குக் கவிஞர்கள் செய்து வருகிற அரிய உதவி கிலேகளேக் கருதி யுணர்பவர் அதிசய மடைந்து துதிசெய்து வருவர். “True poets are the guardians of the state.” (Dillon) "உண்மையான கவிஞர் உலக பரிபாலகர்' என இது குறித்துளது. நாடும் மக்களும் நலமுறப் பாடு பட்டு வருபவர் யார்? என்பதை ஈண்டு ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ளலாம். உலகம் முழுவதையும் தலைமையா ஆளும் அரச ரினும் கவிஞர் தலே சிறந்தவர். உடலுக்குத் தலைபோல் உலகிற்கு அரசன் : அந்தத் தலைக்குக் கண்போல் அரச னுக்குக் கவிஞன் ஒளிபுரிந்துள்ளான். கவிஞனே உரிமை யோடு போற்ருத அரசன் கண் இழந்த குருடனுய் இழிந்து கழிந்து அழிந்து ஒழிந்து போகின்ருன். தக்கவரைப் போற்ருதவர் தகாதவராய் ஒழிகின் ருர் எந்த நாடு அறிஞர்களைப் போற்றி வருகிறதோ, அங்த நாடே ஏற்றமான நல்ல நாடாம். அவ்வாறு போற்ருதது எவ்வகையும் பொல்லாத புலேக்காடே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/29&oldid=912763" இலிருந்து மீள்விக்கப்பட்டது