பக்கம்:வீரபாண்டியம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சீ விய ம் 3+ கவிஞர் உள்ளம் துயராய் உணர்வொளி கிறைத்து யாண்டும் சுதந்திரமான தலைமையில் கிலவியிருத்த லால் எல்லாருக்கும் கல்லதைச் சொல்ல வல்லவராகின் ருர். நன்மை தோய்ந்து உண்மையாய் உயர்ந்தவரே பிறரைத் திண்மையா உயர்த்த முடியும். உயர்ந்த கவிகளிடம் இயல்பாகவே தெய்வத் திரு வருள் சுரந்திருத்தலால் யாண்டும் அவர் தலைமை யாகவே தகைமையுடன் நிலவி நிற்கின்ருர். The poet is not any permissive potentate, but is emperor in his own right. (Emerson) 'கவிஞன் எந்த அரசனுக்கும் அடங்கினவன் அல் லன் தன் கிலேமையில் அவன் தலைமையான ஒரு சக்கரவர்த்தியே." எமர்சன் என்னும் அமெரிக்க மேதை இங்ங்னம் குறித்திருக்கிருர் எந்த நாடும் கவிஞர்களே எவ்வாறு போற்றி வந்துள்ளது! இன்றும் அவர்களே எவ்வகையில் பேணி வருகிறது? என்பதை இந்த உரையால் ஈங்கு அறிந்து சிந்தை தெளிந்து கொள்ளலாம். உண்மைக் கவிஞன். கவிஞன் பிறருடைய தயவை நோக்கி வாழ்பவன் அல்லன். எவரும் தன்னேப் புகழ்ந்து போற்ற வேண்டும் என்று எண்ணுபவனும் அல்லன். அவ்வாறு எண்ண நேரின் அவன் உண்மையான கவிஞயிைருக்க முடியாது. தன் உள்ளத்தில் பொங்கி எழுகின்ற நல்ல அறி வின் சுவையிலேயே கவிஞன் களித்துத் திளேக்கின்ருன். அவனது உவகை புனித நிலையில் பொலிந்து திகழ் கிறது. உள்ளம் தெய்வ ஒளியில் உலாவி வருகிறது. அறிவானந்தம். அறிவின் நுகர்வில் ஆன்மானங்தம் மேன்மையாய்ப் பெருகி வருதலால் அதனைப் பருகி மகிழ்பவர் வேறு எதையும் விழையாமல் தனியே விலகி விடுகின்றனர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/30&oldid=912785" இலிருந்து மீள்விக்கப்பட்டது