பக்கம்:வீரபாண்டியம்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கெல்லைக் கொள்ளையிட்ட படலம். 259 1499. மாலையிட்ட நாள் முதலா மதகரியும் இளம்பிடியும் மருவி நின்ற கோலமெனக் கலைமானும் பிணேயுமெனக் கூடிநாம் குலாவி வாழ்ந்தோம்: மாலைவரை கண்டுமன மகிழ்ந்திருந்தேன் மடங்கலெனப் போன வுன்னேக் காலேயிங் த கிலேகண்டேன் என்ன ரசே! யினியென்று காண்பேன் கொல்லோ? (68) 1500. பாலிலயல் நீர் கலந்து பணத்துக்கு விற்றறியேன்: பழுது சொல்லிக் கூலிதனேக் குறைத்தறியேன்: கோட்சொல்லிக் குலேத்தறியேன்: கோலி வைத்த வேலிதனே யழித்தறியேன்; மேலோரைப் பழித்தறியேன்: வினையேன் கொண்ட தாலிதனே யழித்ததென்ன தெய்வமே! எனத்தலையில் தாக்கி வீழ்ந்தாள். (69) 1501. தண்டடர்ந்து வந்தாலும் தனி.எதிர்ங்தே எளிதடிக்கும் தறுகண் வீரா! ■ கொண்டையங் கோட்டை மறவர் குலமணியே! விலைமதியாக் கோவா முத்தே! பண்டைவினைப் பயனிதுவோ என் தலையில் இப்படியும் பாவித் தெய்வம் கொண்டெழுதி யிருக்குமெனக் கனவிலுநான் குறித்திலனே கோவே! கோவே! (70, 1502. கையிலே கம்பெடுத்தால் காண்டீபம் எடுத்துவந்த காளே முன்னே வெய்யபகை விலகுதல்போல் விலகுமே விலகாத வீரம் வாய்ந்த ஐயனே! என்னவி அருந்துணையே! ஆணழகா: அரசே இந்த 70. தண்டு=படை. கொண்டயங் கோட்டை என்றது மறவருள் ஒரு பிரிவு. சிறந்த வீரமரபினன் என்று உள்ளம் பரிந்து உயிர் துயராய்க் கரைந்து அழுது புலம்பியுள்ளாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/306&oldid=912799" இலிருந்து மீள்விக்கப்பட்டது