பக்கம்:வீரபாண்டியம்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கெல்லைக் கொள்ளையிட்ட படலம். 25t வேளேயுங்கள் முன்புயிரை விடுவனென்ருள்: பிற்கட்டு விரைந்தி ரங்கிப் பாளே யமாம் எங்கள்நெல்லைப் பயமின்றி எடுத்தவரார்? பயப்ப டாமல் நீளவுரை! நின்னேநான் காத்தருள்வன் என்ன அவள் நெறியே சொன்னுள்: (75) 1507. பாஞ்சாலங் குறிச்சிமன்னன் படைகளொடு மந்திரியாம் பிள்ளே வந்து பூஞ்சாலி நெல்லேளல்லாங் கொள்ளே கொண்டனன் என்புருடன் புகுந்து தாக்கத் தாஞ்சால மிகுந்தமையால் அடித்துகில வறையில்வைத்துத் தாவிப் போளுர்: நாஞ்சாமி யினியிருக்க ஞாயமில்லை என்றழுது நவின்று நின்ருள். {ᏑᏋ) பிற்கட்டு சினந்தது. 1508. என்றவுரை செவிப்படலும் இருவிழியும் பொறிப்பறக்க எழுந்து பொங்கி நன்றிகெட்ட மனிதர்செயல் நன்றுகன்று நங்காய்! நீ அஞ்சல் ஒன்றும் வென்றி மிகு காவலனுய் கின்றிருந்த உன் கொழுநன் மேன்மைக் காக இன்றுனக்கே எழுகோட்டை விதைப்பாட்டை யினிதளித்தேம் என்றுங் கொள்க. (773 1509 எனத்தேற்றி அவளே விடுத்து எழில்மிகுந்த பரியொன்றி லேறி நேரே சினத்தோற்றத் துடன் வந்து வைகுண்ட மாநகரஞ் சேர்ந்து நெல்லின் வனத்தோற்ற கிலேயறிந்து வயிறெரிந்தான் நிலவறையை நோக்கி வீரன் கனத்தோற்றம் கண்டழுதான் காரியஞ்சீர் செய்யுமெனக் கழறி மீண்டான். (78)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/308&oldid=912802" இலிருந்து மீள்விக்கப்பட்டது