பக்கம்:வீரபாண்டியம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கா வி ய சீ வி ய ம் உள்ளத்திலிருந்து ஊறி வருகிற உணர்வின் சுவை பேரின்ப வெள்ளத்தின் கிளையாகிறது. ஆகவே அதன் அதிசய சுகம் தெளிவாய் அறியலாகும். அக நோக்கு, புற நோக்கு என நோக்குகள் இரு வகைகளாய்ப் பிரிவு கொண்டு பெருகியுள்ளன. முன்னது மெய்ஞ்ஞான வழி. பின்னது அஞ்ஞான விழி. அது மெய்யான இன்ப நலன்களே அருளுகிறது. இது பொய்யான மையல் மருள்களேயே தருகிறது. பொறி நுகர்வு அருந்தல் பொருந்தல்கள் ஆகிய பொறிநுகர்வு களிலேயே யாவரும் வெறிகொண்டு திரிகின்றனர். அறிவின் சுவையை அறிவார் அரியர். ஒரு தேசத்தில் வாழுகின்ற மாந்தர் பண்பாடு படிந்து நல்ல மேன்மையான கிலேயில் உயர்ந்துள் வானரா? அல்லது புண்பாடு புகுந்து பொல்லாத கீழ்மை யான புலேயில் தாழ்ந்துள்ளனரா? என்பதைத் தெளி வாக அளந்து தெரிந்துகொள்ள வேண்டுமானல் அதற் குச் சரியான சிறந்த கருவி ஒன்று உள்ளது. அந்த அளவு கருவி எது? உணர்வின் இனிய சுவையே. உணர்விலே சுவை காணுமல் உணவிலேயே சுவை கண்டு களித்துத் திரிகின்ற மக்கள் உருவங்களால் மனிதர்போல் தோன்றினும் அவர் உண்மையான மனிதர் ஆகார். புன்மையான ஒருவகை மிருகங்களே. வாய் உணவையே அவாவி விழுங்கி வயிற்றை கிறைத்து உடலேக் கொழுக்க வளர்த்து ஊனமாய் இழிந்து கழிந்து உழந்து திரிகிற அந்தக் கூட்டத்தின் இருப்பு பூமிதேவிக்கு வெறுப்பான பெரிய ஒரு சுமையே. அருவருப்பான கொடிய நெடிய பாரமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/31&oldid=912806" இலிருந்து மீள்விக்கப்பட்டது