பக்கம்:வீரபாண்டியம்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. நெல்லைக் கொள்ளையிட்ட படலம். 265 கிருபம் தந்தது. 1521. வந்தவனே அருகிருத்தி வருசினத்தை மனத்திருத்திப் பிற்கட் டென்னும் அந்தமகன் அனுப்பியுள்ள நிருபத்தை நிருபன்கை யகத்து வைத்துச் சந்தமுடன் இதைப்படித்துப் பாருமெனப் பிள்ளேயிடம் தந்தான்; வாங்கி முந்த அதை நோக்குமுன்னே முகங்கருகி அகங்கலங்கி மூச்செறிந்தான். (90) 1522. சொல்வந்தான் வாய் திறந்து வேருென்றும் சொல்லாமல் தொல்லே யாக நெல்வந்த நிலைநாணி நிலைநின்ற தலைகுனிந்து கிற்றல் கண்டு மல்வந்த திண்டோளான் மனமிரங்கி வினே நிலையை மறுகி எண்ணிப் பல்வந்த போதிருந்து படிதெரிந்தான் முடிவறிந்து பகர லான்ை. (91) உள்ளம் வருக்தி உரைத்தது. 1523. கொள்ளே செய் தாரென் ருெரு.பழி இந்தக் கோதிலா அரசினுக்கு என்றும் எள்ளலாம் வகையி லியற்றினே அந்தோ என்றினி யிப்பழி மறையும்? தெள்ளுமா மதிய னென்றுனே யுணர்ந்து தேர்ந்துகைக் கொண்டனன் தெளியாப் பிள்ளேமா மதிய யிைனை பெரிய பிழையிது பிள்ளேமா மகனே! (92) 1524. உன்றனில் லகத்தி லுறமுறை யறிய ஒருமகன் தனக்கு நீயுவந்து 91. சொல்லில் வல்லவரான பிள்ளை இங்கே ஒன்றும் பேசா மல் ஒடுங்கி நின்றது பிழைபாடுகளே நினைந்தும், அரசனது மனநிலையை உணர்ந்தும் என்க. பல்வந்த போதிருந்து படி தெரிந்தான் என்றது இளமையிலிருந்தே உலக நிலைகளே நன்கு தெரிந்துள்ள ம ன் ன ன் என்றவாறு. படி=பூமி. உலகம் தெரிந்தவன் உண்மை தெளிந்து உரைத்தான். 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/312&oldid=912811" இலிருந்து மீள்விக்கப்பட்டது