பக்கம்:வீரபாண்டியம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சி வி ய ம் 33 அவர் இருப்பதை விட இல்லாமல் ஒழிவதே நல்லது: நல்லவர் எல்லாரும் இவ்வாறே சொல்லி யுள்ளனர். செவியின் சுவைஉணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? குறள்: 420) இனிப்பு புளிப்பு கைப்பு கார்ப்பு உப்பு உறைப்பு என இவ்வாறு வாய் உணவிலேயே நசை மீதுர்ந்து உண்டு களித்து உழலுகின்றனர்; உயிர்க்கு இனிய அமுதமான சிறந்த உணர்வின் சுவையை யாதும் உண ாாமல் தீதாய் அலைகின்றனர்; அவல நிலையிலுள்ள அந்தப் புலே மிருகங்கள் இருந்தால் என்ன? செத்து ஒழிந்தால் என்ன? என்று வள்ளுவப் பெருமான் இப்படி உள்ளம் கொதித்து வைதுள்ளார். இந்தப் பொய்யா மொழியின் வேகத்தையும் விவே கத்தையும் மனத்துடிப்பையும் மானச மருமத்தையும் உணர்விழந்த வாழ்வின் ஊனத்தையும் உயிர் இரக்கத் தையும் குறிப்பையும் கூர்ந்து ஒர்ந்து உண்மை நிலே களேத் தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். கலேயின் சுவை உணர்வைத் தேவர் கருதி உவங் துள்ள உண்மை ஈண்டு நுண்மையாய் உணர வங் துளது. அறிவின் இனிய சுவைகளே அறியாமல் ஒழிந்த அளவே அந்த மனித சமுதாயம் இழிந்து கழிந்தது என்பதை இங்கே தெளிந்து கொள்கின்ருேம். நல்ல அறிவின் சுவைகளே உணர்ந்து நுகர்ந்து உவந்து வருபவர் எவரோ அவரே உயர்ந்த மக்களாய்ச் சிறந்து திகழ்கின்ருர். அறியாமல் ஒழிந்தவரோ பரிதாப மாய் இழிந்து பாழாய் அழிகின் ருர், சிறந்த நாட்டு மக்கள் யார்? இழிந்த காட்டு மாக்கள் எவர்? மேலே வந்துள்ள காட்சிகளால் இந்தக் கேள்வி களுக்கு உரிய விடைகளேச் சரியாகத் தெளிந்து உணர்வு கலங்களே நன்கு ஒர்ந்து கொள்ளலாம். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/32&oldid=912824" இலிருந்து மீள்விக்கப்பட்டது