பக்கம்:வீரபாண்டியம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெட்டாவது படை எழுச்சிப் படலம். பாஞ்சாலங்குறிச்சியாரோடு போர் புரிய மூண்டு கும்பினி யார் படைஎடுத்து நீண்டு வந்துள்ளதைஇதுகூறுகின்றது. 1580. போன பிற்கட்டு நெல்லேயுட் புகுந்ததும் பொங்கி மான மீதுற மந்திர நகர்வங்து மறுநாள் ஆன தோணிமேல் ஏறியே சென்னேயை யடைந்தான் தான மன்னவர் சபையினைத் தகவுறச் சார்ந்தான். (1) 158 I. வந்த தென்னென முன்னவர் வரன்முறை வினவ முந்து கின்று தன் கண்கள் நீர் சிங்தினன் மொழியான் நைந்து விம்மினன் நயந்தவர் கண்டுள மிரங்கி நொந்த தென் உனே நோவுறச் செய்ததார்? நுவல்க. (2) | 582. பிற்கட்டு பேசியது. ஒன்றும் அஞ்சல்நீ உரையென அவர்ஒருங் குரைத்தார்: நின்று யர்ந்ததென் பாஞ்சைமன் கிலேதிரிங் தெவர்க்கும் பொன்று துன்பங்கள் புரிகின்ருன் புகலரி தங்தோ: என்றும் தன்னர சாகவே எண்ணிமீ தெழுந்தான். (3) 1583. வலிந்த ழைத்துநாம் வரிசைகள் செய்ததால் நம்மை மெலிந்த தன்மையர் என மிக இகழ்ந்தனன் மேலாப் நலிந்து நாட்டிடை கவை.பல புரிகின்ருன் நாளும் மலிந்து நின்றுமே மாறுகள் செய்கின்ருன் மதத்தே. 1584. வரியை மன்னித்து மாண்பவற் செய்ததே நமக்குப் பெரிய துன்பமாய் முடிந்தது: பிறரையும் அந்த உரிமை யின்படி நின்ருென்றும் உதவலீர் என்று விாகு சொல்லியே கலகங்கள் பலவிளேத் துள்ளான். | 585. அல்ல லிவ்வள வாகுமோ ஐயகோ நமது நெல்லே யும் அவன் மந்திரி நேர்வந்து கொள்ளே ஒல்லே யாடியே யுற்றகா வலரையும் கொன்று வல்லே ஏகினுன் வந்தவெம் படையுடன் மறைந்தே. (6) 1. மந்திர நகர்=துாத்துக்குடி. தான மன்னவர்=கும்பினித் தலைவர்கள். வெள்ளேயர் உள்ளம் உளேய உரைத்துள்ளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/324&oldid=912833" இலிருந்து மீள்விக்கப்பட்டது