பக்கம்:வீரபாண்டியம்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 விர பாண் டி யம் விரைவுடன் திரட்டினன் வெய்ய சேனேயின் வருபெருங் தலைவர்கள் வந்து கூடினர். (21) கூடிய தலைவருள் கொற்ற மிக்கவன் பீடுயர் காலனென் றுரைக்கும் பேரினன் நீடு பல் போரினில் நேர்ந்து வென்றவன் தேடிய புகழினன் சிறந்து நின்றனன். (22) அப்பெருஞ் சேனேகட் கதிப கைவே எப்பெரும் போரிலும் எதிர்ந்து சென்றவன் ஒப்பரும் பானர்மேன் என்று ரைத்திடும் வெப்புடை நெஞ்சின்ன் விரைந்தெ ழுந்தனன். (23) ஆறுறும் ஆயிரம் அமைந்த வீரர்கள் ஏறிய வலியினர் எதிர்ந்த தெவ்வரைச் சிறிய செயலினர் செறிந்த அப்படை தேறிகின் றெழுந்துதென் திசையை நோக்கிற்றே. (24) மதுரையை யடைந்தது மருவி மூன்றுநாள் சதுருடன் வைகையைச் சார்ந் திருந்தது கதுமென எழுந்து பின் கடுகி யேநடந் ததிர்வுடன் சாலேவா யடைந்து வந்ததே. (25) தென் திசை வழித்திரு மங்கலஞ் செறிந் தொன்றிய விருதையூர் கடந்துள் ளுக்கமாய்ச் சென்று சாத்துாரினைத் தீர்ந்து கோவில்வாய் நின்றுதென் விரைந்து பின் நிமிர்ந் தெழுந்ததே. (2.6) சார்கயத் தாற்றினில் தங்கிப் பற்பல ஊர்கடங் தருநெறி யொருங்கு நீங்கி நற் சீருறு நெல்லேயைச் சேர்ந்து றைந்தது போருறு நிலையினேப் பொருந்தி ஆய்ந்ததே. (27) 22. காலன் என்றது காலினஸ் (Collins)என்னும் தளபதியை. 23 Major Bannerman மேஜர் பானர்மேன் என்பவர் எல் லாச் சேனைகளுக்கும் தலைமை அதிபதியாய் நிலவி நின்றன். 27. திரிசிரபுரத்திலிருந்து புறப்பட்ட படை மங்கம்மா சாலே வழியே நடந்து பல இடங்களிலும் தங்கி முடிவில் கயத்தாறு என்னும் ஊரை அடைந்தது. அதன் பின் பா ளே ய ங் கோட்டை போய்ச் சேர்ந்தது. செறிந்து ஆய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/327&oldid=912837" இலிருந்து மீள்விக்கப்பட்டது