பக்கம்:வீரபாண்டியம்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 வீ ர ப ா ண் டி ய ம் 1612 மூண்ட இவ் வீரனே முன்இ ணக்கிளுல் ஈண்டினி யாருமே எதிர்வ தில்லையால் ஆண்டவ ராகவே யாண்டும் ஆளலாம்: நீண்டநாள் வாழலாம்: நெடிது காலமே. (33). 1613 தென்திசைக் கதிபதி என்னும் சீர்த்தியை நின்றிசைத் தெவருமே கெடிது போற்றிட நன்றிசைக் களிப்புடன் நாளும் வாழ்ந்தெங்கும் -- வென்றிசைத் திறலுடன் விளங்கி யுள்ளவன். H ஒர்ந்தது. 1614 அன்னதோர் மன்னனே அடக்கி ஆளவே இன்னதோர் படையுடன் ஈண்டு வந்துளோம்; முன்னதோர் வனவெலாம் முறையின் ஒர்ந்துநாம் பின்னதோர் உறுதியைப் பெறுதல் வேண்டுமான். தேராமல் சேரலாகாது. 1615 எதிருறு கிலேமைகள் எவையும் முன்னுறச் சதுருடன் தேர்ந்தபின் சார்வ தேநலம்; அதிசய வலியினர் ஏனும் ஆய்ந்துணர் மதிநலம் இலேனனின் மாயும் யாவுமே. {36A காலம் கருதிக் கருமம் புரிக. 1616 காரியம் கருதியும் காலம் ஒர்ந்துமுன் நேரிய வலியிடம் கிலேமை யாவையும் கூரிய நோக்குடன் கூர்ந்து உணர்ந்தபின் சீரிய பணியினைச் செய்ய வேண்டுமால். (37} 33. ஆங்கிலேயர் ஈண்டு நெடிதுவாழக் கடிது சூழ்ந்துள்ளனர். அவ் வுண்மை இதில் நுண்மையாய் உணர வந்துளது. 34. பாஞ்சை அதிபதியினுடைய நிலைமை தலைமை வலிமைகளை நினைந்து தெளிந்துள்ளமை இதில் வனைந்து காண வந்தது. 36. ஆற்றல் இருந்தாலும் அறிவின் துணை ஏற்றமாய் வேண்டும் என எண்ணியுள்ளனர். சதுர்=சாதுரியம்: புத்தி. 37. இடம் காலம் வலி முதலிய நிலைமைகளை நன்கு தெரிந்தே காரியம் புரிய வேண்டும் என்று கருதியுள்ளனர். வினையாண்மை விநயமாய் விளங்கி அவர் தம் கருமத்திறல்களை விளக்கி நின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/329&oldid=912839" இலிருந்து மீள்விக்கப்பட்டது