பக்கம்:வீரபாண்டியம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கா வி ய சீவி ய ம் கலே அறிவின் சுவை நுகர்வைக் கொண்டே மோலோர்களின் கிலேககிளயும், கீழோர்களின் புலேகளே யும் கூர்ந்து ஆன்ருேர்கள் தேர்ந்து கொள்கின்றனர். "Taste will be a proper standard to judge of a nation's improvement or degeneracy in morals.” -(Goldsmith) அறிவின் சுவையால் அறியலாம் மாந்தர் நெறியுயர்வைக் கீழ்மையை நேர். இந்த ஆங்கில வாசகத்தில் குறித்துள்ள பொரு 8ளத் தனித் தனியே நுனித்து உணர்ந்து கொள்ள வேண்டும். ஒர்ந்து உணர்பவரே உண்மையான பொருள் களேத் தேர்ந்து தெளிந்து கொள்ளுகின்றனர். அகத் துள்ளே மகத்துவமாய் விளைந்து வருகிற அறிவின் பத்தை நுகர்ந்து வருபவர் சிறந்த மதிமான்களாப் உயர்ந்து வருகின்றனர். அங்த இனிய சுவை துகர்வை இழந்தவர் மதிகேடராய் இழிந்து போகின்ருர். மக்களும் மாக்களும். மக்களுள்ளே கல்லாதவரினும் கற்றவர் சிறந்தவர்: கற்றவருள்ளும் அறிவின் சுவையை உணர்ந்து சுகித்து வருபவர் அரிய பெரிய மேதைகளாய் உயர்ந்து திகழ் கின்ருர். உணர்வு தெளிய உயர்வு மிளிர்கிறது. தத்துவ ஞானிகள் ஆத்துமானங்தத்தை அனு: பவித்துத் தனியே அமர்ந்து சாந்த சீலராய் மகிழ்க் துள்ளனர். வித்தக விவேகிகள் அறிவானந்தத்தை அனுபவித்து நெறி நியமங்களோடு விளங்கி நிற்கின்றனர். உயர்ந்த கலேயுணர்வின் சுவைகளே நுகர்ந்து உள் ளம் உவந்து வருதலால் வேறு எதையும் கவனியாமல் தனிமையாகவே கவிஞர்கள் இனிமையாயுள்ளனர். அவர்களுடைய சிறந்த எண்ணங்களின் எழுச்சிகளே கவிகளின் வண்ணங்களாய் உருவெடுத்து வருகின் றன. உலக மக்களுக்கு அவை உணர்வொளிகளேயூட்டி உறுதிகலன்களைக் காட்டி யருளுகின்றன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/33&oldid=912840" இலிருந்து மீள்விக்கப்பட்டது