பக்கம்:வீரபாண்டியம்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுச்சிப் படலம் 289 படை வந்த வழி. 165.1 நெல்லேநன் னகரய லிருந்து நேர்வடக்கு எல்லேயின் கீழ்த்திசை இருபத் தைந்தெனச் சொல்லிய வழியினைத் துணிந்து நோக்கியே நல்லதோர் பொழுதென நடத்தல் மேயினர்.(72) தருக்கி கடந்தது. 1652 செல்லுக என்றலும் சேனை சீருடன் ஒல்லேயில் நடந்ததுள் ஊக்கம் மிஞ்சியே வல்லவர் முன்பினும் வரிசை யாகவே எல்லேயில் செருக்குடன் எழுந்து வந்தனர். (73) கொடிய கொலைக் கருவிகள். 1653 குண்டுகள் பீரங்கி கொடிய வெம்புகை கண்டிடு கருமருந் தாதி கட்டிய பண்டிகள் உடன் வரப் படைகள் மூண்டுமே மண்டிமுன் வந்தன மாண்டு போகவே. (74) கபாவு ஒற்றி உணர்ந்தது. 1654 இப்படி இப்படை வருதல் பிற்பகல் எப்படி யோதெரிந்து எனது பாட்டனும் ஒப்பருங் திறலினன் உறுதி யாகவே தப்பற இடைவழி சார்ந்து நின்றனன். (75) ஊக்கி கின்றது. 1655 அரசனுக் குறவினன் ஆற்றல் மிக்கவன் பரசிடு பண்பினன் பகைவர் செய்கையை விரசிமுன் உணர்ந்தனன் விநய வீறுடன் வரவெதிர் நோக்கியே வழியில் ஊக்கினன். (76) 1 ஆங்கிலப் படை யாரும் அறியா வகை இரவிடை மருமமாய் வரு _கை நவாபு துரை அறிந்து வழியிடையே உடைவாளோடு ஒளி _த்து நின்ருர். அரசுக்கு நெருங்கிய உறவினரான இவர் அதிசய _ற்றலும் மதியூகமும் உடையவர். 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/336&oldid=912847" இலிருந்து மீள்விக்கப்பட்டது