பக்கம்:வீரபாண்டியம்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 வி ர ப ா ண் டி ய ம் படை வருகிற கிலை. 1656 கும்பினிப் படைகள் வெங் கொடுமை யாகவே வம்புகள் விளேத்திட வருவது ஒர்ந்திந்த நம்பிநேர் நடுவழி நாடி நிற்குங்கால் தும்பிநேர் படைகளும் தொடர்ந்து வங்தன. (77} இடைவழியில் தெரிந்தது. 1657 சிவலப் பேரியூர் மார்க்கம் சீருடன் ஏவரும் தெரிகிலா வகையில் ஏறியே யாவரும் வருவதை ஆய்ந்து ணர்ந்துமுன் ஆவதைச் செய்திட அடல்கொண் டேகின்ை. கபாவு வந்தது 1658 ஒட்ட நத்தம் நபாவெனும் உயர்குல வீரன் கட்டி யேஎதிர் காத்துகின் ருன் படை வரவும் ஒட்டி முன்னறிந்து ஒடிவங்து இரவொருமணிக்குத் தட்டி ன்ை அர சரண்மனைத் தனிப்பெருங்கதவை. இடித்து எழுப்பியது 1659 கழுதும் கண்அயர்ங் துறங்குமிக் காரிருளிடையே பழுது வந்ததே பாண்டியா! துரக்கமா? உடனே எழுதல் நன்றென இடித்தனன் அடுத்தடுத் தெவரும் தொழுதுநிற்குமத் தொன்முறைவாயிலேத்தொடர்ந்தே. அரசன் எழுந்தது. 1660 என்றும் யாருமே இப்படி எழுப்பலர் ஏன்? என்று அன்று வேந்தனே அடர்ந்துடன்வந்துமுன் திறந்தான்; நின்ற வன்புகுந்து அருகடைந் துறுபடை நெடிதா ஒன்றி வந்திடுஞ் செயலினே உரிமையோ டுரைத்தான். பகைப் படை வருதலை உரைத்தது. 1661 படைதிரண் டெழுந்து இரவிடைப் படுவஞ்ச மாக அடைய வேவரு செயலினே அறிந்துடன் வங்தேன் இடைஎதிர்ந்துகொம் பாடியின் சாலேநேர் கண்டேன்; விடையில் ஒடிநான்முந்தினேன்.விரைந்ததும் வருமே. 80 கழுது=பேய், பேயும் உறங்குகிற இந்த நள்ளிருளிலே வெள்ளைப் பேய்கள் துள்ளி வருகின்றன என்று எழுப்பியுள்ளார். 82 கொம்பாடி என்னும் ஊர் பாஞ்சாலங்குறிச்சிக்குத் தென்மேற்கே ஆறு மைல் தூரத்தில் வழி அருகே உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/337&oldid=912848" இலிருந்து மீள்விக்கப்பட்டது