பக்கம்:வீரபாண்டியம்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 வி ர ப ா ண் டி ய ம் சத்த மின்றியே வந்தயல் சார்ந்தது சாரப் பத்தொடு எட்டுறு நாழிகை பாறியது இரவே. முரசங்கள் முழங்கின. 1668 பாதி ராத்திரி கழிந்தபின் படைகளங்கு அடைய மோதி மூண்டெழுமன்னவன் முரசங்கள் முழங்கச் சாதி வீரர்கள் சமரினே கினேந்துளங் களித்தே ஏதி ஏந்திய கையராய் எங்கணும் நின்ருர். (89) வந்தவர் மருண்டது. 1669 யாரும் ஈண்டறி யாவகை யாம்கரந்து இரவே சேர வந்தனம்; சேர்வதை எதிரறிங் துடனே வீர பேரிகை முழங்கின விண்ணிடை பிடிகள் கோர மாகவே முழங்கிய முழக்கெனக் கொதித்தே. பேரிகை முழக்கத்தின் விளக்கம். 1670 போரை யேஎதிர் நோக்கியுள் ளுக்கமே பூண்டு வீர மாய் அவன் வீற்றிருப் பதனைநேர் விளக்கித் திரமான இப் பேரிகை முழக்கங்கள் தெளிவாய்ச் சார மாகவே காட்டின சாருவ தென்னுே: (91) அஞ்சாத அருந்திறலாளன். 1671 அச்ச மின்றியே அருந்திற லுடையன யாண்டும் உச்சம் ஆகவே இருந்துளன்: உற்றுள நம்மைத் துச்சம் ஆகவே நினைந்துளன்: தொடுசம ரிடையே நிச்சயம்.இவன் வெல்வனே? எனகினைந்தயர்ந்தார். கருவிகளுடன் வக்தவர் வெருவி கின்றது. 1672 கொடிய பீரங்கி கொலேபல புரிகிற திய பொடிகள் பூண்டுவெம் புகைவகை புலேகளும் (பொருங்தி கெடிய தூரத்தில் உள்ளவர் எவரையும் நேரே மடியச் செய்திடு வெடிகளும் மருவியுளிருந்தும்: 90 பாஞ்சை மன்னன் விழித்து வீர பேரிகை முழக்கியுள்ளான். வெள்ளேயர்க்கு அது வியப்பை விளைத்துள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/339&oldid=912850" இலிருந்து மீள்விக்கப்பட்டது