பக்கம்:வீரபாண்டியம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சி வி ய ம் 35 ஆதி கவி ஆகிய வால்மீகி முனிவர் தவவனத்தில் தனியே இருந்தே இராமகாதையை இனிமையாகப் பாடியருளினர். அறிவின் சுவைகள் சுரங்து வர, ஆன் ம இன்பம் நிறைந்து வர அன்பு மீதுrர்ந்து அ ைர் பாடி புள்ள பான்மையை அயலே வருகிற ஆரிய சுலோகம் சிரிய முறையில் மேன்மையா விளக்கி யுளது. கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக ரம் ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம். (வால்மீகம்) கவிதை என்னும் கற்பக தருவின் அற்புதக் கிளே யில் அமர்ந்து ராம ராம என்று அதிமதுரமான மொழி களே இனிமையாக் கூவுகின்ற வால்மீகி என்னும் அழ கிய குயிலே நான் வணங்குகின்றேன்.' அற்புதமான அதிசய காவியத்தைப் பாடியுள்ள முனிவரை இப்படித் துதிசெய்துள்ளனர். கோகிலம் என்றது இசையின் இனிமை கருதி. வசந்த காலத்தில் குயில் கூவும்போது அதன் தொனி மிகவும் இனிமையாயிருக்கும். இராம சரிதமாகிய அரிய சீவிய காவியத்தை யாவரும் ஒதியுணர்ந்து உய்யும் படி மதுரகீதமாய்ப் பாடியருளிய கவிஞர் திலகம் கோகிலம என நேர்ந்தார். பறவையாய்ப் பிறந்திருந்தாலும் இனிய கானத் தால் அரிய ஞானிக்குக் குயில் உவமையாய் வந்தது. வாக்குதயத் தால் அன்றிக் கற்றவரை மற்றவரை ஆக்கைநயத் தால் அறிய லாகாதே-காக்கையொடு நீலச் சிறுகுயிலே நீடிசையால் அன்றியே கோலத்து அறிவருமோ கூறு? காக்கையும் குயிலும் உருவத்தால் ஒன்றுபோல் இருந்தாலும் குரலின் இனிமையால் குயில் மதிப்புறு கிறது; மனிதர் ஒத்த உருவத்தினராய்த் தோன்றிலுைம் கற்றவர் மற்றவரினும் மாண்பு மிகப் பெறுகின் ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/34&oldid=912851" இலிருந்து மீள்விக்கப்பட்டது