பக்கம்:வீரபாண்டியம்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுச்சிப் படலம் 293 விடிந்தபின் பார்ப்போம். 1673 வந்த வெள்ளேயர் வன்சமர் வலிந்துமுன் புரியச் சிங்தை செய்திலர்: இரவிடைகழிந்துசெங்கதிரோன் முந்தவே எழுந்து ஒளிவெளி செய்தபின்முதல்வன் எந்த வாறுளன்? என்பதை அறியவே துணிந்தார். பாசறையில் இருந்தது. 1674 பாஞ்சைக் கோட்டையின் அயலொரு பாசறை அமைத்து வாஞ்சை யோடதில் வரிசையாய் வதிந்தனர்; இரவின் பூஞ்சை போவதை இரவிநேர் புகுவதை நினேங்தே ஆஞ்சை யால்வங்த அவரவண் அமர்ந்தினி திருந்தார். (95) அரசன் துணிந்தது. 1675 அந்தக் கும்பினிக் கும்பல்கள் அவ்வகை அமர இந்தக் கோமகன் இயல்பையும் செயலேயும் இனமா முந்தமூண்டுள முடிவையும் துணிவையும்முறையே சிங்தை கூர்ந்து நாம் தெளிந்துளம் தேர்ந்திட (நேர்ந்தேம். வீரர்கள் கின்றது. | 676 மூண்டு சேனைகள் வஞ்சமாப் போர்செய (முனேந்தே ஆண்டு வந்துள கிலேமையை அறிந்ததும் மாந்தர் பூண்டி ருந்ததம் துயில்மயல் ஒழிந்தனர்; புறத்தே கிண்டு நின்றனர்; நிறைநிறை கூடினர் நெடிதே. ககர மாந்தர் கினைந்தது. 1677 என்ன நேருமோ? எவ்வகை ஆகுமோ? இகலோர் பன்ன ருந்திறற் படுகொலேக் கருவிக ளோடு துன்னி வந்துளர்; துனேவலி படைவலி எதுவும் மன்னி கின்றில:மன்னவன் என்செய்வான் தனியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/340&oldid=912852" இலிருந்து மீள்விக்கப்பட்டது