பக்கம்:வீரபாண்டியம்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 வி ர ப ா ண் டி ய ம் மறலிக்கு ஒரு விருந்து. 1688 கருமருந்தொடும் கலங்கிய நெஞ்சொடும் கலந்தே ஒருவ ரும் அறி யாவகை ஒளித்துவந் திங்கு மருவி யுள்ள இவ் வன்படை முழுவதும் மறலிக்கு ஒருவி ருந்தென உதவுவன் என்றுருத் துரைத்தான். வீரம் விளக்குவன் 1689 இரவு வந்த இப் படையெலாம் இறந்துக நூறி வரவு கண்டவர் செலவையும் காண முன் வகுத்துக் கரவு கொண்டநெஞ் சுடையவர் கண்முனே எனது விரவு மேன்மையும் வீரமும் விளக்குவன் என்ருன். நீறு செய்வேன். 1690 எனது சேனையும் என்குல வீரரும் இலாத அனேய செவ்வியை அறிந்துளம் செருக்கிவந்தடைந்த இனைய தானேயை என்ஒரு வாளில்ை இன்னே நினையு மாத்திரை நீறுசெய் வேன் என நிமிர்ந்தான். வெற்றி பெறுவேன். 1691 இன்று வந்தெ&ன வ8ளந்துள படைகளே யானே சென்று தாக்குவன் திரிபுரம் நீறெழச் சிரித்த குன்ற வில்லியின் குமரவேள் அருளினுல் என்ருன் வென்றி அல்லது வேருென்று தெரிகலா வீரன். வஞ்ச கெஞ்சினர். 1692 வஞ்ச நெஞ்சொடு வரூதினி யுடன் வரு காலன் எஞ்சல் இல்லதோர் வலியினன் என்னினும் என்னே செஞ்ச டைப்பரன் சேவடி பெயர்க்குமுன் தீர்ந்த அஞ்சனத்திறல் மறலிபோல் அழிவன் என் றறைந்தான் 109 மறலி=எமன் கூற்றுவன் உண்டு களிக்க இன்று ஆற்றுவன் என்பது விருந்து என்றதால் தெரிய வந்தது. 112. குன்றவில்லி= சிவபெருமான். 113 ஆங்கிலப் படைகளுக்குத் தளபதியாய் வந்துள்ள காலன் (Collins) என்பவன் இன்று காலனுக்கு இரை யாவன் என்று உரையாடியுள்ளார். வருதினி=படை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/343&oldid=912855" இலிருந்து மீள்விக்கப்பட்டது