பக்கம்:வீரபாண்டியம்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுச்சிப் படலம் 297 1093 எந்த நாளினும் யாருமே இந்நகர்ப் பேரைச் சிந்தை செய்யினும் திகில்கொண்டு விலகுவர்; இன்று வந்தின் வாறிவர் வளைந்தனர்; வாழ்வினை இழந்தார்; முந்த வல்வினே துாண்டிட மூண்டனர் முனேந்தே. என்றும் இசையுறச் செய்வேன். 1694 வெற்றி வேற்பரன் அருளினல் என குல வீரக் கொற்ற மாட்சியைக் குவலயம் அறிந்திடக் குடியாய் முற்ற வங்தவர் முன்னுறத் தெரிந்து பின் வாங்க எற்றை நாளும்என் பெயருற இன்றுநான் செய்வேன். வேலன் அருள் உண்டு. 1695 வீர வேலுண்டு; வேலவன் அருளுண்டு: மேலோர் பூச மாச்செய்த புண்ணிய பலமுண்டு; புயத்தே :யே மாய்ச்செழித் துள்ளமெய்த் திறலுண்டு; செருவே வார மாய் விழைந் துள்ள கூர் வாள்.உண்டு; வாழ்வே. மான வீரன். 1696 மானம் ஒன்றுமே மனிதனுக்கு உயிரினும் சிறந்து வான மாமணி எனஒளி வழங்கியுள் உளதால்; ஆன பேரொளி அளவுமே வாழ்வ. திலேயேல் ஊனம் ஆமென உளந்துணிந் துறுதிகூர்ந்துரைத்தான். $ தேவியைத் தொழுதது. 1697 உரிய தன்குல தெய்வமாய் ஒளிமிகுந் துள்ள அரிய தேவியின் ஆலயம் புகுந்தவள் அடியில் பிரிய மாய்த்தொழு தெழுந்தனன்; என்றுமே பேணும் பெரிய தெய்வமே! அருள் எனப் பொருளுடன் (துதித்தான். _ வாழ்ந்தால் மானமாய் வாழவேண்டும்; அந்த ஒளி ஒழியின் உயிர்வாழ்வு ஈனமே என எண்ணியுள்ளான். S தனது குலதெய்வம் ஆகிய சகதேவியை வணங்கித் தொழுது வழிபட்டுள்ளான். இந்த வீர ச த் தி யி ன் கோயில் கோட்டையுள் மேல் ப்ால் உள்ளது. உருவம் யாதும் கிடையாது. கூரிய வாள் ஒன்றே சீரிய முறை .யில் மேலே மறைவாய் மருவியுளிது; சிவநிசிதோறும் புனிதமான பூசனைகள் புரிந்து இந்த மரபினர் வழிபாடு செய்து விழுமிய அன்புடன் தொழுது வருவர். 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/344&oldid=912856" இலிருந்து மீள்விக்கப்பட்டது