பக்கம்:வீரபாண்டியம்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 . வி ர ப ா ண் டி ய ம் து.ாதனை விடுத்தது. 1714 தம்முள்ளே சூழ்ந்துகொண்டு கோட்டையுள்ளே சார்ந்துரைத்து மீள வல்ல வெம்மையுள்ளான் யார்என்ன ஆராய்ந்து வேகன் எனும் விவேகன் தன்னைச் செம்மையுள்ளார் போல்விடுத்தார்.தேர்ந்தவனும் துணிந்தெழுந்து சேர வந்தான் எம்மருங்கும் வீரர்கிற்கும் இயல்நோக்கி அஞ்சியுள்ளே இனிது புக்கான். (135) துணிவுரைத்தது. 1715 அரசனே நேர் கண்டவுடன் ஆச்சரியம் அடைந்துள்ளே அடங்கி நின்று பரசிவந்த பரிசுரைத்து வரவெதிர்பார்த் திருக்கின்ருர் பதியே! என்ருன்; சரசமாய் அவனுரைத்த மொழிகேட்டுச் சார்ந்தவரை இங்கே பார்க்க விர சிநான் இருக்கின்றேன் விழைந்தென்று வேந்தன் எதிர் விளம்ப லான்ை. (136)

  • அரசு மொழிந்தது.

1716 உரிமையுடன் எனக்கான ஒருவருக்கும் தெரியாமல் ஒளிந்து வந்து பரிபடையோடு இவணடைந்து நகரயலே பதுங்கிநிற்கும் பான்மை என்னே? பிரியமுடன் உள் வந்தால் பேசுவன யாவையுமே பேசி அன்பாய் ஒருபெரிய விருந்துண்டு போகலாம் என்றவர்.பால் உரைபோய் என்ருன். (137)

  • வந்த தூதுவனிடம் இந்தவாறு மன்னன் உரைத்து விடுத்துள்ளான். நேரே வராமல் தீய கொலேக் கருவி களுடன் வஞ்சமாய் வந்திருப்பதை .ெ வ று த் து வீறுடன் உரைத்திருக்கிருன். உரைகளில் உறைந் துள்ள உணர்வுறுதிகளே ஒர்ந்துகொள்ள வேண்டும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/349&oldid=912861" இலிருந்து மீள்விக்கப்பட்டது