பக்கம்:வீரபாண்டியம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கா வி ய சீ வி ய ம் அறிவு சொல் செயல்கள் இனிமை தோய்ந்து வரின் அந்த மனிதர் மகான்களாய் உயர்ந்து திகழ்கின்ருர். அறிவின் சுவையிலேயே களித்துத் திளேத்து வரு கிற கவிஞர் தனியே ஒதுங்கி இருந்துகொண்டு தாமா கவே உல்லாசமாய்ப் பாடி உவந்து வருகின் ருர். தனி மையில் இனிமையை நுகர்ந்து வருதலால் அரிய இனிய கவிகளைக் கவிஞர்கள் இயல்பாகவே பாடிக் கொள் கின்றனர். “A poet is a nightingale who sits in darkness and sings to cheer its own solitude with sweet sounds.” (Shelley) கவிஞன் என்பவன் இரவில் ஏகாந்தமாய்த் தனியே அமர்ந்துகொண்டு தானகவே உவந்து பாடுகிற உயர்ந்த பறவை' என்று வெடில்லி என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு பாடியிருக்கிரு.ர். குயிலும் ஒயிலான குருவியும் கவிஞர்க்கு ஒப்பாய் வந்துள்ளன. அந்த அந்த நாட்டு நிலைகளும் தெரிய நேர்ந்தன. கண்ட காட்சிகளேயே யாண்டும் காட்டி யருள்கின்றனர். உள்ளத்தில் தோய்ந்த அனுபவங்களே உரைகளாய் வெளிவருகின்றன. எந்த காட்டிலும் கவி ஞர்கள் எவ்வாறு இருப்பர்! அவர் எத்தகைய கிலே யினர்! எவ்வகைய வாழ்வினர்! என்பதை ஈண்டு உய்த்து உணர்ந்து கொள்கின் ருேம். அவர்களுடைய இருப்பும் விருப்பும் வாழ்வும் சூழ்வும் வையம் உய்யவே வாய்ந்து வந்துள்ளன. சிருட்டி கருத்தர்கள். உயர்ந்த எண்ணங்களே எண்ணிவரும் அளவே மாந்தர் சிறந்த மேலோராய் விளங்கி வருகின்றனர். அரிய பெரிய கருத்துக்களும் இனிய அறிவு நலன் களும் கவிகளி லிருந்தே உதயமாய் வருகின்றன. இதிகாசங்கள், புராணங்கள், காவியங்கள், தரும் நூல்கள், நீதிநூல்கள் என இன்னவாறு பேர் பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/35&oldid=912862" இலிருந்து மீள்விக்கப்பட்டது