பக்கம்:வீரபாண்டியம்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 £721 22, 22 £723 வி ர பா ண் டி ய ம் செயல்மறந்து மன்னவன் தன் சேனேவெளி நின்றிடவும், ஆதனுரர் வாழ் வயமிகுசென் னவன் என்பான் வயவிரர் பலருடனே வாவி வந்தான். (141) விரசென்னன் விரைந்தது. காலைஎட்டு நாழிகையில் கதிரவனும் மேல்எழுந்தான்; வடபால் நேர்ந்த மூலையிலச் சென்னன்வந்து முட்டினன் அவ்வமையம் முப்பத் தெட்டு வாலவய வீரருடன் மன்னனுக்குத் தம்பிஎனும் மாண்பு வாய்ந்த கோலமிகு சிவத்தையா குதிரைமீ திவர்ந்துகோப் புலிபோல் வந்தான். (142) சிவத்தையா புகுந்தது. பரியிவர்ந்து வந்த அவன் படையடர்ந்து கிற்கின்ற பரிசை நோக்கி எரியிவர்ந்த நெஞ்சினய்ை எவ்வகையில் கோட்டைக்குள் புகுவது? என்று வரியிவர்ந்த வேலோடு வயல் அயலே உலாவிவந்தான் வடகீழ்த் திக்கின் புரியிவர்ந்த இடைசிறிது தெரியவே புரவியைநேர் கடாவிப் புக்கான். ( 143) தாவிப் பாய்ந்தது. விடுவழியை என்றங்த வீரமகன் விரைந்துவர வெள்ளே வீரர் கடுவழியிண் டில்லேநீ நாடாமல் அயலோடி நடபோ! என்ருர்; படுபழியீ தென்றுரைத்துப் பரியுகைத்து நேர் பாய்ந்தான்; பாய மூண்டு சுடுவெடியால் சுட்டார்கள்: குதிரையங்கே துடித்துவிழத் துள்ளிப் பாய்ந்தான். (144)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/351&oldid=912864" இலிருந்து மீள்விக்கப்பட்டது