பக்கம்:வீரபாண்டியம்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுச்சிப் படலம் 3.05. குதிரை வீழவே குதித்துப் போனது. 1724 ஏறிவந்த போர்க்குதிரை எதிரிசுட்ட குண்டுகளால் இறங்து வீழ வீறுடனே மேலிருந்த வீரன் அயல் தாவியே வேல்கை ஏந்திச் சீறிவிரைந் தடலோடு கோட்டையுள்ளே சென்ருன் அத் திறலே நோக்கி மாறிகின்ற மாற்றலரும் மாருமல் அதிசயித்து மதிம ருண்டார். (145) மன்னன் மகிழ்ந்தது. 1725 உற்றதம்பி வெற்றியுடன் ஊக்கமாய் வந்தடைந்த உறுதி நோக்கிக் கொற்றவனும் மிகமகிழ்ந்து கொண்டாடிக் குலவிரக் குரிசி லேநீ! உற்றகடுஞ் சமையத்தில் உறுதுனேயாய் உள்வந்தாய் இனிமேல் இந்தப் பற்றலரை அழித்தொழித்து வெற்றியுறல் எனக்கேதும் பாரம் அன்றே. (146) கேர் ஆக்க கினைந்தது. 1726 வாசிமேல் வந்த அந்த வயவிரன் செயல்நிலையை வளைந்து சூழ்ந்து 146 சிவத்தையா என்பவன் அரசனுக்குத் தம்பி முறையி _ன். சிறந்த போர்வீரன். இரவு பாஞ்சையில் முழக்கிய விர பேரிகையின் ஒசையைக் கேட்டு ஏதோ ஆபத்து நேர்ந் பள்ளது என்று உணர்ந்து உடனே குதிரையில் ஏறித் தன் _ாரிலிருந்து வேகமாய் வந்தான். காலே ஏழு நாழிகை அளவில் வடகீழ்த் திசை அடைந்தான். பகைவர் தடுத்தார்; கடுக்கவே வாசியைத் தட்டி உள்ளே பாய்ந்தான்; பாயவே வெள்ளேயர் சுட்டார்; குதிசை துள்ளி விழுந்து மாண்டது. ாளவே மேலே தாவிக் கோட்டைக்குள் பாய்ந்தான். அந்த _திசய விரக் காட்சி ஆங்கிலேயருக்கு அரிய வியப்பையும் பெரிய திகைப்பையும் நேரே விளேத்தது. 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/352&oldid=912865" இலிருந்து மீள்விக்கப்பட்டது