பக்கம்:வீரபாண்டியம்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 வி ர ப ா ண் டி ய ம் எள்ளரிய பகையின்றி இன்பமுடன் இருக்கலாம்: இன்றேல் இன்றே வெள்ளேயர்தம் படைமூண்டு வெம்போரை விளேக்குமென விளம்பி விட்டான். (154) மாமனிடம் மன்னன் உரைத்தது. 1734 மாமன்வந்து மன்னவன்முன் அவன்சொன்ன வாறெல்லாம் வகுத்துச் சொன்னுன்; காமன் என கின்றஇவன் கண்ணுன பிள்ளேதனேக் கடுத்து நேரே ஏமன் வந்து கேட்டாலும் இசைந்துநான் கொடுத்திடேன்: இன்று இவர்க்குத் தாமமிகு பொருள் வேண்டின் இப்பொழுதே வேணமட்டும் தருவேன் என்ருன். (155) எடைக்கு எடை தங்கம் தருவேன். 1735 பிள்ளே எடைக் கிடைநிகராப்ப் பேரொளிசெப் தங்கமே வேண்டும் என்ன உள்ளமுற விழைந்தவர் தாம் உரைத்தாலும் உவந்தின்றே உதவு கின்றேன்; எள்ளலுற அவனேநான் கைவிடேன்: இப்படையே அல்ல வேறே வெள்ளமென வந்தாலும் வெள்ளேயரை வேரறுத்து வெல்வேன் என்ருன். (156) அடுத்தவரைக் கைவிடேன். 1736 ஆருயிரை விடுத்தாலும் அடுத்தவரைக் கைவிடுதல் அழகோ? போரில் ஒருயிரும் இல்லாமல் ஒழியினும் என் உடம்பிலுயிர் உள்ள மட்டும் சீரழிந்து வந்தவர்க்குத் திறைசெலுத்தி கின்றிடேன் என்ருன் சேர்ந்த 154 தளபதி இவ்வாறு உள்ளம் திறந்து உறுதிமொழிகனே உரைத்து விடுத்தான். மாமன் உணர்ந்தான்; மன்னனிடம் வந்தான்; அவன் சொன்னவை யாவும் உரைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/355&oldid=912868" இலிருந்து மீள்விக்கப்பட்டது