பக்கம்:வீரபாண்டியம்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. த் தொன் ப த | வ து போர் மூண்ட படலம். பாஞ்சாலங்குறிச்சி மேல் மூண்டு வந்த கும்பினிப் படைகளுக்கு ஆங்கிலத் தளபதிகள் பலர் பாங்கோடு அமர்ந்திருந்தனர். அவர் பெயர்களே அயலே கானுக. ஜாண் பானர் மேன் (John Bannerman) தலைமையான தானத் தலைவன். சுமார்ட் (Major Smart), காலின்ஸ் (Lieut. Collins), of ruil (Captain Robert , L-dboorefr(Dallas). gifas (O’reilly), Liebgo (Bruce), 513,5ts” (Douglas), பிரெளண் (Lieut. Brown), பிளாக்கி (Blake), முதலானவர்கள் உபதளபதிகளாய் உற்றிருந்திருந்தனர். தென்னுட்டுக்காரிய விசாரனேயின் பெரிய அதிகாரியான பிற்கட்டு மேஸ்தரும் (Perket) வந்திருந்தார். இவரே எல்லா உளவுகளேயும் கூட இருந்து சேதிைபதிகளுக்குக் கூறி நின் ருர் சமாதான வழிகள் யாதும் பலியாமல் போனமையால் சமர் மூண்டது. கும்பினிப் பட்டாளங்கள் கோட்டையைச் சுற்றி முற்றுகை யிட்டுச் சுடுவெடிகளோடு அடல்புரிய நேர்ந்தனர். நேர வே அரசன் ப ைட க ள் கடுவேகமாய்க் கலித்து எழுந்தன. வீரர்கள் எழுந்தனர். 1739 போர் என மன்னவன் புகன்ற போதினில் வீரர்கள் எழுந்தனர்; வேல்கள் வாள்கள் மேல் நேருறு வலயங்கள் நெடிய கம்புகள் சூருறு சூலங்கள் துள்ளி வந்தன. (க) வீறுடன் மூண்டனர். 1640 போர்கிடை யாமலே புலந்தி ருந்தவில் வீரர்கள் இச்சமர் விளேந்த தும்மிக ஆர்வமுற் றெழுந்தனர்; ஆண்மை மீறினர்: கார்வர வளர்பயிர் கலித்த தென்னவே. (ഉ_) கார்கண்ட பயிர் போல் போர் கண்டதும் வீ ர ர் க ள் பொங்கி வந்துள்ளனர். இந்த உவமையால் அவருடைய சிந்தை நிலைகளும் தீர வீரங்களும் தெரிய வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/357&oldid=912870" இலிருந்து மீள்விக்கப்பட்டது