பக்கம்:வீரபாண்டியம்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 12 வி ர பாண் டி ய ம் 1746 வில்லெ டுத்து வெகுண்டுவந் தார்பலர்; கல்லெ டுத்துக் கடுத்துவங் தார்பலர்; வல்ல வெங்கவண் வாங்கிவந் தார் பலர்: எல்லே யில்படை ஏந்திவந் தார் பலர். (அ) வெற்றி காண விரைந்தனர். 1747 இன்று வந்திங் கெதிர்ந்த படைகளைக் கொன்று கொன்று குவித்து நரிகள் நாய் தின்று மென்று களித்துச் செழித்திட வென்றி காணுவம் என்று விரைந்தனர். (க) களித்துக் கலித்தனர். 1748 வெள்ளே யாளர் விரிபடை யாவையும் கொள்ளே கொள்ளக் கொடுந்திற லோடிவர் கள் &ள யுண்டு களிக்கின்ற வண்டென உள்ளம் மண்டி உருத்துவங் தேறினர். (0) புலிகளும் எலிகளும் 1749 வலிய வந்து மதில்வளேங்து ஓங்கிய பொலிவ மைந்த அப் போர்ப்படை நோக்கினர்: புலிக ளேப்பொரப் பொங்கி வளேங்தபுல் எலிக ளாகவே எண்ணி இகழ்ந்தனர். (க.க) எதிர் ஏறினர். 1750 மாறு பட்ட மறுபுலத் தார்என வீறு பட்டெழு வீரர்கள் யாவரும் கூறு பட்டுக் கொடுங்திற லோடவர் நீறு பட்டிட நீண்டெதிர் ஏறினர். (க.உ) பொருது மாண்டது. 1751 மூண்டு வந்தவர் தம்மொடு முன்னெதிர் தாண்டு வெம்பரி வீரர்கள் தாக்கினர்; ஈண்டி கின்ற இருதிறத் தும்பலர் மாண்டு வீழ்ந்தனர் மண்டி நெருங்கியே. (கங்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/359&oldid=912872" இலிருந்து மீள்விக்கப்பட்டது