பக்கம்:வீரபாண்டியம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா வி ய சீவி ய ம் 鹭了 வந்துள்ள நூல்கள் எல்லாம் யாரிடம் இருந்து தோன்றி யுள்ளன? ஆன்ற கவிஞர்களிடமிருந்தே பிறந்துள்ளன. கலையுலகங்களுக்கும் அறிவுலகங்களுக்கும் கவிஞர் களே சிருட்டி கருத்தர்களாய் நிலவி கிற்கின்றனர். நல்ல அறிவால் மனிதர் நல்லவர் ஆகின்றனர். அந்த அறிவுநலன்களே நூல்கள் தருகின்றன. அந்த நூல்களேக் கவிஞர்கள் அருளுகின்றனர். இந்த உண்மைகளை ஈண்டு ஒர்ந்து சிந்திக்கவேண் டும். கவிஞர்கள் இலரேல் நூல்கள் இல்லை; நூல்கள் இல்லையேல் நல்ல அறிவுகள் தோன்ரு. அறிவு இல்லாது ஒழியின் மனித இனம் முழு மூடமாய் இழிவடைந்து பழி படிந்து கழிந்து போம். மனிதன் மாடாய் இழியாமலும், நாடு காடாய் ஒழி யாமலும் கருணையோடு பாதுகாத்து வருபவர் யார்: கூர்ந்து ஒர்க: ஒர்ந்து உணர்க! நன்றியறிவுடன் தேர்ந்து தெளிக; தெளிவாய் ஒழுகி உயர் க! வீர காவியம். இந்த நாட்டின் அதிசயமான வீர காவியமாப் இக் நூல் விளைந்து வந்துள்ளது. இதனை உரிமையோடு ஒர்ந்து உணர நேரின் எந்த நாட்டவரும் உண்மையைத் தெளிந்து தேர்ந்து உள்ளம் உவங்து வர கேர்வர். வீரபாண்டியன். வீரமா நகரம் என விளங்கி யிருந்த பாஞ்சாலங் குறிச்சியில் அமர்ந்து அரசுபுரிந்து வந்த வீர பாண்டியன் என்னும் மன்னனுடைய சீவிய வரலாறுகளேயும், அவ ரது தம்பி ஊமைத்துரையின் அரிய வீரத் திறல்களேயும் இக் காவியம் முறையே தெளிவா விளக்கியுளது. வீரச் சுவைகளும் ஞான சீலங்களும் எங்கும் கிறைக் துள்ள இந்த வீரகாவியம் வீரபாண்டியம் எனக் காவிய நாயகன் பேரால் சீருடன் விளங்கியுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/36&oldid=912873" இலிருந்து மீள்விக்கப்பட்டது