பக்கம்:வீரபாண்டியம்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14 வீ ர ப ா ண் டி ய ம் வில் வீரர் வீழ்த்தினர். 1759 கல்லமர் உண்டையைக் கையில் கொண்டதம் வில்லிடை வைத்திவர் வெகுண்டு விட்டனர்: பல்லுடை பட்டன: பருத்த நெற்றியில் ஒல்லையில் பட்டவர் உருண்டு வீழ்ந்தனர். (உக) வீழ்ந்து மாய்ந்தனர். 1760 எவ்வழி இருந்துகல் எய்து கின்றதென்று அவ்வழி வீரர்கள் அறிய கிற்றிலர்: வெவ்விய உற்கைகள் வீழ்வ போல்விழ தெவ்வுயிர் கலங்கினர் செத்து வீழ்ந்தனர். (உ.உ) மாயம் என மருண்டனர். 1761 காயமும் கண்டிலம்: கையும் காண்கிலம்: தீயகல் உண்டைகள் சீறி ஏறியே வாயிலும் கண்ணிலும் வந்து பாய்கின்ற மாயவெம் போர் என மயங்கி மாய்ந்தனர். (உகூ} சுட்டவர் பட்டனர். 1762 அம்பினும் கடுவிசை யாக வந்துகல் கும்பலில் பாய்வன: குறியும் தப்பில: வெம்பிமுன் சுட்டவர் வெருண்டு பட்டனர்: தும்பியில் துடித்தனர்; சுருண்டு வீழ்ங்தனர். (உச) பல்வகைப் போர். 1763 வில்லுகள் பழகிய வீரர் வீறுடன் கல்லுகள் சொரிந்தனர்: கம்பில் தேர்ந்தவர் வெல்லுறு விறலுடன் விரைந்து மண்டியே ஒல்லேயில் பாய்ந்துமுன் உருத்தடித்தனர். (உடு} சூறையாடினர். 1764 வில்லெறி கல்களால், வேல்கள் வீசலால்,

  • வல்லயம் நீட்டலால், வாள்கள் வாட்டலால்,

வில்லாளிகள் எய்த திறம் வெள்ளேயர் எல்லாரையும். கதிகலங்கச் செய்தது. மதிமருண்டு மாண்டனர்.

  • வலிய இரும்பினுல் வேல்போல் கூர்மையாச் செய்த ஆயுதம் வல்லயம் என வந்தது. அயம்=இரும்பு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/361&oldid=912875" இலிருந்து மீள்விக்கப்பட்டது