பக்கம்:வீரபாண்டியம்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1777 1778 1779 17 8() 1782 19. போர் மூண்ட படலம் 317 ஒருவரை ஒருவர்முன் உயிர்கு டித்திடப் பொருதிறம் யாவையும் புரிந்து முட்டினர். (கூஅ) உடல்கள் உடைந்தன. தலைகளும் தோள்களும் தாள்க ளும்பல மலேகளும் திடர்களும் மாக வெங்களம் நிலதெரி யாவகை நிறைந்து நின்றன: விலைதெரி யாமணிப் பூணும் மின்னின. (கூக) கொலைகள் குவிந்தன. வெட்டினர் குத்தினர் விரைந்து கொட்டினர் முட்டினர் தட்டினர் முசலம் விட்டனர் ஒட்டினர் எற்றினர் உருத் தடித்தனர் கட்டினர் கடித்தனர். கடுத்தொ டித்தனர். (ச0} குதிரைகள் அழிந்தன. வனத்துறு கலைகளே வ8ளத்து வேட்டையில் சினத்தொடு செகுத்திடு செய்கை போலவே மனத்தினும் கடியவெம் பரிகள் பாழ்பட இனத்தொடும் சிதைத்தனர் ஏற்றம் இன்றியே. மண்டிகள் இட்டிவர் குத்தி வாளில்ை கண்டங்கள் அறும்படி வெட்டிக் கம்பினால் மண்டைகள் சிதறிட மாட்டி வன்கழு துண்டுளம் மகிழ்ந்திட உதிரம் ஊட்டினர். (ச-உ) உதிரங்கள் ஓடின. அலகைவாய்ச் சோரியும் அயில்கொள் வேலுடைப் புலவுவாய்ச் சோரியும் பொருத ழிந்தவர் தலையின் வாய்ச் சோரியும் சமர பூமியின் இலகுவாய்ச் சோரியும் எங்கும் சேந்தவே. (சக) திண்புயம் இழந்தவர்: சிரங்கள் தீர்ந்தவர்; கண்பொழி கோப்வெங் கனல விந்தவர்: விண்புகழ் விர்ராய் விரைந்து வந்தவர் மண்புக மாய்ந்துமே மறிந்து வீழ்ந்தனர். (சச)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/364&oldid=912878" இலிருந்து மீள்விக்கப்பட்டது