பக்கம்:வீரபாண்டியம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 கா வி ய சீ வி ய ம் முப்பத்திரண்டு படலங்கள் இதில் அடங்கி யிருக் கின்றன. மூவாயிரத்து எண்ணுற்றுப் பதினெரு கவிக ளால் இக்காவியம் மேவியுளது. நடந்த நிகழ்ச்சிகளே கேரே தெளிவாகப் படம் பிடித்துக் காட்டி யுள்ளமை யால் இந்தப் பாடல்களின் அதிசய ஆடல்களே யாவரும் கண்டு களித்துக் கதிநலம் காணுவர். உலக சரித்திரங்களும் தேச வரலாறுகளும் அரசி யல் வரிசைகளும் ஆட்சி முறைகளும் அதிகார நிலை களும் வாழ்க்கை வகைளும் காலச் சூழல்களும் அதிசய விசித்திரங்களாய்த் தோன்றியுள்ளன. தோன்றின மறைந்து போகின்றன: மறைந்தன தோன்றி வருகின்றன: பழையன கழிந்து ஒழிகின்றன; புதியன கிளர்ந்து எழுகின்றன. இயற்கை விநோதங்கள் இன்னவாறு எங்கனும் காலத்தின் கோலங்களாய்க் கலித்து வருகின்றன. ஆங்கிலேயர் ஈங்கு வந்தது. கி. பி. 1792ல் இந்த நமது பாரதபூமி ஆங்கிலேயர் கைவசம் ஆயது. வணிக முறையில் பொருள் ஈட்டக் கருதி ஈங்கு வந்த வெள்ளையர் பின்பு அரசாள நேர்ந் தனர. கால வேற்றுமையால் யாவும் மாறுபட்டு வேறு பாடு அடைக்து வருவதை ஞாலம் பார்த்து வருகிறது. இந்தத் தேசத்தின் வீர சரித்திரமாய் விழுமிய கிலேயில் இது தேசு மிகுந்து வந்துள்ளது. கி. பி. 1798 முதல் 1801 வரை பாஞ்சாலங் குறிச்சியாருக்கும் ஆங்கிலேயருக்கும் நடந்த கடுமை யான போராட்ட வரலாறுகளே இதில் பாராட்டப்பட் டுள்ளன. அதிசயமாய் கடந்த சரித்திரம் மதிநலம் சுரந்து வந்துள்ளமையால் யாவரும் இதனைத் துதி செய்து விழைந்து பயின்று வியந்து மகிழ்ந்து வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/37&oldid=912884" இலிருந்து மீள்விக்கப்பட்டது